என் மலர்
நீங்கள் தேடியது "கண் நோய் பாதிப்பு தீவிரம்"
- தினசரி 4,000 முதல் 4,500 பேர் வரை சிகிச்சைக்கு வருவதாக மருத்துவத்துறையின் தெரிவிக்கின்றனர்.
- பயம் தேவையில்லை. பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
தருமபுரி,
தமிழகத்தில் செப்டம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவும். அந்த வகையில் அனைத்து பகுதிகளிலும் இந்த பாதிப்பு உள்ளது.
மாநிலம் முழுவதும், தினசரி 4,000 முதல் 4,500 பேர் வரை சிகிச்சைக்கு வருவதாக மருத்துவத்துறையின் தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுவரை சுமார் 1.5 லட்சம் பேர் வரை இந்த பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.ஆனால் யாருக்கும் பார்வை இழப்பு ஏற்படவில்லை.
சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிமாக உள்ளது. கண்ணில் உறுத்தல், சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். இந்த நோய் பாதிப்பு உள்ளோர், கண்களை கையால் தொடக்கூடாது. அப்படி தொட்டு விட்டு, அருகே இருப்பவர்களை தொட்டால், அவர்களுக்கும் நோய் பரவும்.
பாதிக்கப்பட்டவர் மூன்று, நான்கு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பயம் தேவையில்லை. பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் பயன்படுத்துவது நல்லது. வீட்டில் ஒருவருக்கு பயன்படுத்திய மருந்தை மற்றவர்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.