என் மலர்
நீங்கள் தேடியது "மானசி நாயக்"
- இந்தி, மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் மானசி நாயக்.
- தற்போது நாயக் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன் என்று பேட்டியளித்துள்ளார்.
இந்தி, மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை மானசி நாயக், கடந்த வருடம் பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில வாரங்களாக இருவருக்கும் சுமுக உறவு இல்லை என்றும், விவாகரத்து செய்து பிரியப் போகிறார்கள் என்றும் தகவல்கள் பரவின. இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரவர் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து திடீரென்று நீக்கியதும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

மானசி நாயக்
இந்நிலையில் இருவரும் பிரிவதை நடிகை மானசி நாயக் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''நாங்கள் பிரிவதாக வெளியான வதந்திகள் உண்மைதான். விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். என்ன தவறு நடந்தது என்று சொல்வது சரியல்ல. ஆனால் அது வேகமாக நடந்து விட்டது. குடும்பம் நடத்த ஆசைப்பட்டு விரைந்து திருமணம் செய்தேன். அங்குதான் தவறு நடந்துள்ளது. ஒரு பெண்ணாக எனக்கும் சுயமரியாதை இருக்கிறது. ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுத்து போக முடியாது'' என்றார்.