search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேல ராமமூர்த்தி"

    • ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரித்துள்ளார்.
    • படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.

    ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீராயி மக்கள்'.

    விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிகழ்வினில்…

    இயக்குநர் கோகுல் பேசியதாவது…,

    இது போன்ற மண் சார்ந்த படங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாகரிகம் என்பது கிராமத்தில் தோன்றியது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை, வெகுளியான மக்களை நாம் அங்குதான் பார்க்க முடியும், இப்படி ஒரு கதையை படமாக்க நினைத்த என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். படம் நிச்சயமாக வெற்றி பெறும் நன்றி.

    நடிகர் வேல ராமமூர்த்தி பேசியதாவது,

    இந்தப் படத்தில் நான் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையில் சொல்ல போனால் நான் நடிக்க வில்லை, எனக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாகவே பொருந்தி விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. என் அம்மாவைப் போல இந்த வீராயி என் கண் முன்னே தோன்றினார். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் நன்றி.

    தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் சுரேஷ் நந்தா பேசியதாவது…,

    எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் நாகராஜிற்கு நன்றி. தயாரிப்பாளர் மற்றும் கதைநாயகன் என்பது பெரிய பொறுப்புதான் அதை சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன்.படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

    இயக்குநர் நாகராஜ் பேசியதாவது…,

    இந்த படம் முழுக்க நான் வாழ்ந்து பார்த்த அன்பு, கோவம், வாழ்க்கை, வாழ்வியல்,இயக்குநர் சுசீந்திரன் சாருக்கும் நன்றி அவருடன் பணி புரிந்தது ஒரு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. இந்தச் சூழலில் நான் மாரிமுத்து சாரை நினைத்துப் பார்க்கிறேன், அவரது முயற்சி இந்த படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. இந்தப் படம் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது. எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. இப்படி பட்ட அழகான காட்சிகள் பல இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் ஆள் மனதை தொடும் என்று நம்புகிறேன். என்னுடன் பணி புரிந்த அனைவருக்கும் நன்றி.

    இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.

    நேற்று படத்தின் பாடல்களும் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
    • இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

    மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இந்த படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நித்துள்ளனர்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விமல் அமரர் ஊர்தி ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    விரைவில் வெளியாக இருக்கும் "போகுமிடம் வெகுதூரமில்லை" படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. டிரைலரில் விமல் மற்றும் கருணாஸ் அமரர் ஊர்தியில் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படம் அழுத்தமான கதையம்சம் கொண்டிருக்கும் என்று டிரைலரில் தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘போகும் இடம் வெகுதூரமில்லை’
    • படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படம் பற்றி மைக்கேல் கே.ராஜா கூறியதாவது:-

    மந்திரி குமாரி படத்தில் இடம் பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடலில் இடம்பெற்ற போகும் இடம் வெகு தூரமில்லை என்ற பாடல் வரிகளை தலைப்பாக எடுத்தோம். படத்துக்கு இந்த தலைப்பு பொருத்தமாக அமைந்தது.

    விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விமல்.

    ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில் விமல் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மன அழுதத்தில் அரசியல் பிரமுகர் உடலை ஏற்றி சென்று கொண்டிருக்கும் விமல் ஆம்புலன்சை வழிமறித்து கருணாஸ் ஏறுகிறார். மன அழுத்தத்தில் சென்று கொண்டிருக்கும் விமலின் அருகில் அமர்ந்து கொண்ட கருணாஸ் வள வளவென பேசிக் கொண்டே வருகிறார். இது ஒருபுறமிருக்க மரணமடைந்த அரசியல் புள்ளிக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் ஆளுக்கொரு ஆண் பிள்ளைகள். இவர்களால் யார் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வது என்பது பற்றி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது.

    இதையொட்டி நடந்தது என்ன? என்பது தான் படத்தின் கதை. படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'குற்றப் பரம்பரை’, ‘குறுதி ஆட்டம்’ போன்ற பல நூல்களை எழுதி பிரபலமடைந்தவர் வேல. ராமமூர்த்தி.
    • இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    'குற்றப் பரம்பரை', 'குருதி ஆட்டம்', 'பட்டத்து யானை' போன்ற பல நூல்களை எழுதி பிரபலமடைந்தவர் வேல. ராமமூர்த்தி. இவர் 'மதயானை கூட்டம்', 'கொம்பன்', 'அண்ணாத்த' போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது பெயரில் மோசடி நடப்பதாக தெரிவித்துள்ளார்.


    வேல ராமமூர்த்தி

    அதாவது, என் பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பணம் கேட்டு ஏமாற்றுவதாகவும் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் வேல. ராமமூர்த்தி எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ×