என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காள தேசம் இந்தியா தொடர்"

    • ஜடேஜாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை.
    • டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 0 என கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.

    இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட ஆடவில்லை. அவர் இந்த வங்கதேச அணியுடனான தொடரில் தான் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்கப்படிருந்தது. முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவை மாற்று வீரராக உள்ளே கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகவில்லை. இதனால் அவரை இந்த 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ளதால் மாற்று ஸ்பின்னரை சேர்க்கவில்லை.

    • உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும்.
    • குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்.

    வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு சுருண்டது.

    அதை தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி 46 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா டெத் ஓவர்களில் சொதப்பியதே தோல்விக்கு காரணமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் வேதனை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    9 விக்கெட்டுகள் எடுத்ததால் வெற்றி இந்தியாவிடம் இருந்தது. பேட்டிங் மோசமாக இருந்தும் பவுலர்கள் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவை போட்டிக்குள் மீண்டும் கொண்டு வந்தார்கள். குறிப்பாக 40 ஓவர்கள் வரை பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் யார் நம்முடைய டெத் பவுலர்? குல்தீப் சென்னா அல்லது தீபக் சஹரா? அது போக கடைசி நேரத்தில் நாம் கேட்ச்சுகளை விட்டோம். அதற்காக ராகுலை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர் சமீப காலங்களில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

    இருப்பினும் நல்ல ஃபீல்டரான அவர் தான் டி20 உலக கோப்பையில் லிட்டன் தாஸை ரன் அவுட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் தாவி கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை. அந்த வகையில் நமது ஃபீல்டர்கள் மிகவும் அழுத்தத்துடன் செயல்பட்டார்கள்.

    நாம் அழுத்தத்தில் நிறைய தவறுகளை செய்தோம். போதாக்குறைக்கு நாம் முக்கிய நேரத்தில் ஒய்ட் மற்றும் நோ-பால்களை வீசினோம். ஆனால் உலக கோப்பையை வெல்வதற்கு அழுத்தத்திற்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும். அதை நோக்கி தான் இங்கிலாந்து - நியூசிலாந்து போன்ற அணிகள் வளர்ந்து வருகின்றன. அதனால் தான் அவர்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் உயரே பறக்கிறார்கள்.

    மொத்தத்தில் தொடர்ச்சியாக அழுத்தத்தில் நாம் தடுமாறுவது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. 40 ஓவர்கள் வரை நம்மிடம் இருந்த வெற்றியை கடைசி நேரத்தில் மெகதி ஹசன் எப்படி விளையாட வேண்டும் என்பதை நமக்கு காட்டி வங்கதேசத்தை வெற்றி பெற வைத்து விட்டார். அதற்கு நமது கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் மோசமாக இருந்ததே காரணம். குறிப்பாக கடைசி 10 ஓவர்களில் இளம் பந்து வீச்சாளர்கள் வெற்றியை பினிஷிங் செய்ய முடியாமல் கோட்டை விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது.
    • மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

    மிர்புர்:

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வங்காளதேச அணி திரில் வெற்றியை பெற்றதுடன், தொடரையும் வசப்படுத்தியது. இதில் 6 விக்கெட்டுகளை விரைவாக பறிகொடுத்து தள்ளாடிய வங்காளதேச அணியை 7-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் மக்முதுல்லாவும், மெஹிதி ஹசன் மிராசும் கைகோர்த்து காப்பாற்றினர்.

    முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மெஹிதி ஹசன் மிராஸ் இந்திய பந்து வீச்சை பின்னியெடுத்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். சதத்தை எட்ட கடைசி ஓவரில் அவருக்கு 15 ரன் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்குர் வீசிய இறுதி ஓவரில் 2 சிக்சர் பறக்க விட்ட அவர் கடைசி பந்தில் தனது 'கன்னி' சதத்தை பூர்த்தி செய்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் சேர்த்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களுடனும் (83 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), நசும் அகமது 18 ரன்களுடனும் (11 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். அவர்கள் கடைசி 10 ஓவர்களில் 102 ரன்கள் குவித்தனர்.

    பின்னர் 272 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. ஆனால் 50 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 266 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் திரில் வெற்றியை ருசித்தது. இதனிடையே வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 8-வது வரிசையில் களம் புகுந்து சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி ஒரு வீரர் சதம் விளாசுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு அயர்லாந்தின் சிமி சிங் 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8-வது வரிசையில் இறங்கி 100 ரன்கள் அடித்திருந்தார்.

    • வங்காள தேச அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை
    • 2-வது போட்டிகளில் இலக்கை எட்ட முடியாமல் 5 ரன்னில் இந்தியா தோல்வி அடைந்தது.

    இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை சந்தித்தது.

    மெஹிதி ஹசன் ஆட்டமிழக்காமல் 39 பந்தில் 38 ரன்கள் சேர்க்க, வங்காள தேசம் கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்தது.

    நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 69 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்திருந்தது. அதன்பின் மெஹிது மெஹ்முதுல்லா ஜோடி அபாரமாக விளையாடியது, மெஹிதி சதம் அடிக்க வங்காளதேசம் 271 ரன்கள் குவித்துவிட்டது.

    பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 266 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

    இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் இந்திய வீரர்களின் ஃபார்ம் குறித்து சேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதில் ''நம்முடைய பெர்ஃபார்மன்ஸ் கிரிப்டோ கரன்சியை விட வேகமாக சரிந்து விட்டது. அதில் இருந்து மீண்டு வர வேண்டியது அவசியம். எழுந்திருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    • இந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
    • ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

    வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடி வருகிறார்.

    தற்போது 5-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இந்த ஜோடியில் ஷ்ரேயஸ் ஐயர் 41* (77) ரன்களும் புஜாரா 42* (116) ரன்களும் எடுத்திருந்த போது முதல் நாள் தேநீர் இடைவெளி வந்தது. அப்போது இந்தியா 174/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41* என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அளவில் சொதப்பாமல் குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.

    இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சச்சின் முதல் டோனி உட்பட வரலாற்றின் அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்ததில்லை. மேலும் என்ன தான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனம் இவரிடம் இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

    அதன் காரணமாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை நட்சத்திர வருங்கால வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.
    • 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

    சட்டோகிராம்:

    வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இந்திய அணி. சுப்மான் கில் 20 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்களிலும், விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 41 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காத இந்திய அணி, 48 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்த நிலையில் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய பண்ட், தனது வழக்கமான அதிரடியை காட்டினார். டி20, ஒருநாள் போட்டியில் வேண்டுமானாலும் அவர் தடுமாறலாம். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் டாப் வீரர் என்பதை நிரூபித்தார்.

    இதனால் சரிவிலிருந்த இந்திய அணி, அடுத்த சில ஓவர்களில் மீண்டது இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது,இந்திய அணி 85 ரன்களை எட்டியது. 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 இன்னிங்சில் 50 சிக்சர்களை விளாசிய 2-வது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார்.
    • வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார்.

    இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடினார். நிதானமாக விளையாடிய புஜாரா 90 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்‌ஷர் படேல் பொறுமையாக விளையாடினார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்தது.

    வங்காள தேசம் அணி தரப்பில் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்திய அணி 102.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
    • வங்காள தேசம் அணி தரப்பில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சட்டோகிராம்:

    இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 90 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் (அவுட் இல்லை), ரிஷப்பண்ட் 46 ரன்னும் எடுத்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்ரேயாஸ் அய்யருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். சதம் அடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 'அவுட்' ஆனார்.

    மேலும் 4 ரன்களே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி அடங்கும். பொதத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் 7-வது விக்கெட் 293-வது ரன்னில் விழுந்தது.

    8-வது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்திய அணி 102.2-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்க்கு 348 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 40 ரன்னிலும் குல்தீப் யாதவ் 21 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    • டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான்.
    • சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    வங்காள தேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

    புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.

    முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது. புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்திருந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டு இந்திய அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இருந்தாலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான். உண்மையை சொல்ல வேன்றுமென்றால், இந்திய கிரிக்கெட் அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

    அதுமட்டுமின்றி, அவரது (ஸ்ரேயாஸ் ஐயர்) விளையாட்டு உண்மையிலும் சிறப்பான ஒன்று தான். அதில் சந்தேகம் வேண்டாம். அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா தமிழக வீரர் அஸ்வின் அரை சதம் அடித்து அசத்தினர்.

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கில் 20 ரன்னிலும் கே.எல்.ராகுல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 45 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார்.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா தமிழக வீரர் அஸ்வின் அரை சதம் அடித்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 404 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வங்கதேச தரப்பில் டைஜூல், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேச அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • வங்காள தேச அணிக்கு 512 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
    • சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    சாட்டிங்காம்:

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 404 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் அணி 150 ரன்னில் சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் மற்றும் புஜாரா சதம் விளாசி அசத்தினர். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேஎல் ராகுல் அறிவித்தார்.

    இதனால் வங்காள தேச அணிக்கு 512 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

    • வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
    • புஜாரா, கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

    சாட்டிங்காம்:

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

    வங்கதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இது டெஸ்ட் போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதனால் முன்னிலை ரன்களுடன் வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3-வது நாள் ஆட்ட இறுதியில் களமிறங்கிய வங்காள தேச அணி 12 ஓவர் சந்தித்து விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்து.

    ×