என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிட்டல் பண பரிவர்த்தனை"
- தேனியில் ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாத கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- கலைநிகழ்ச்சிகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேனி:
தேனி-அல்லிநகரம் நகராட்சி காமராசர் பஸ் முனையத்தில் ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாத கலை நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கி தெரிவித்ததாவது,
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வங்கிக்கணக்கை கையாள்வது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் வங்கிகள் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு வரும் போலியான தொலைபேசி அழைப்புகளை எவ்வாறு கையாள்வது, டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தும் போது பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் மற்றும் பொதுமக்கள்,
வாடிக்கையாளர்களின் பொறுப்பு, அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனை போன்றவை குறித்தும் பிரவுசர், வெப்சைட், ஹேப்ஸ் குறித்தும், பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய இணையதளங்களை பயன்படுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பணம் செலுத்தும் செயலிகளை அவ்வப்போது புதுப்பித்து வைத்தல் மற்றும் தெரிந்த பயனாளிகளுக்கு மட்டுமே பணமாற்றம் செய்தல், பணம் செலுத்தும் போது பெறுபவரின் கோரிக்கை தகவல்களை சரிபார்த்தல், கடன் பற்று அட்டை பயன்படுத்தும் போது அட்டை மீது கவனம் செலுத்துதல், பரிவர்த்தனைக்கு பிறகுவரும் குறுஞ்செய்தியில் உள்ள பரிவர்த்தனை தொகை சரியாக உள்ளதா, ரசீதுகளை பாதுகாப்பான முறையில் கையாள்வது போன்றவைகள் குறித்தும்,
ஆன்லைன் செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது, ரகசிய எண்களை பாதுகாப்பாக வைப்பது, பணப்பரிவர்த்தனையின ்போது செய்யப்படும் மோசடிகளை எவ்வாறு தவிர்ப்பது, பணத்தை தவறவிட்டால் சைபர்கிரைமில் புகார் அளிக்க வேண்டியதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பொது இடங்களில் எவ்வாறு சாதனங்களை உபயோகித்து பரிவர்த்தனை செய்தல், பாதுகாப்பற்ற திறந்த வலைதள வசதிகளை உபயோகிக்கும்போது நடைமுறைகளை பின்பற்றி பரிவர்த்தனை செய்தல், பின் நம்பர், ஓ.டி.பி, ரகசிய எண் ஆகியவைகளை ரகசியமாக காப்பது குறித்தும்,
வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு மாறாக தவறுதலாக பணம் செலுத்தப்பட்டு இருந்தால் அதனை மீட்பது போன்றவற்றை குறித்தும், இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
- இ- சேவை, ஆதார் மையங்களுக்கு பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்படுகிறது.
- இ- சேவை மையங்கள், ஆதார் மையங்களையும் செயல்படுத்திவருகிறது.
திருப்பூர்:
டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான சேவைகள், பொருட்களை பணமில்லா பரிவர்த்தனை மூலம் மக்கள் பெறமுடிகிறது. தமிழக அரசு கேபிள் டி.வி.,நிறுவனம், கேபிள் டி.வி.,ஒளிபரப்பு மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் இ- சேவை மையங்கள், ஆதார் மையங்களையும் செயல்படுத்திவருகிறது.
ஆதார் மையங்களில் ஆதார் கார்டில் பல்வேறு திருத்தங்களுக்கு விண்ணப்பித்தல், இ-சேவை மையங்களில் வருவாய்த்துறை, பதிவுத்துறை சார்ந்த சான்றுகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான கட்டணம் மக்களிடமிருந்து ரொக்கமாகவே பெறப்பட்டுவருகிறது.
அரசு கேபிள் டி.வி., நிறுவனம் தற்போது தனது கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதார் மற்றும் இ-சேவை மையங்களில் பணமில்லா பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் 3 மண்டல அலுவலகங்கள் என 14 இடங்களில் அரசு கேபிள் நிறுவனத்தின் இ- சேவை மற்றும் 9 தாலுகா அலுவலகங்களில் ஆதார் மையங்கள் இயங்குகின்றன.
இம்மையங்களில் கடந்த 3 நாட்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு கேபிள் டி.வி., நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள இ-சேவை, ஆதார் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக இ- சேவை, ஆதார் மையங்களுக்கு பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்படுகிறது.
டெபிட், கிரெடிட் கார்டை மெஷினில் ஸ்வைப் செய்வதன் மூலமாகவோ, க்யூ.ஆர்., கோடு ஸ்கேனிங் மூலமாகவோ கட்டண தொகையை எளிதாக செலுத்த முடியும். ஆனாலும் முதியவர்கள் உட்பட டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து தெரியாதோரிடம் கட்டண தொகை வழக்கம்போல் பணமாக பெறப்படும் என்றனர்.
- கேபிள் டி.வி.,ஒளிபரப்பு மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் இ- சேவை மையங்கள், ஆதார் மையங்களையும் செயல்படுத்தி வருகிறது.
- இ- சேவை, ஆதார் மையங்களுக்கு பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான சேவைகள், பொருட்களை பணமில்லா பரிவர்த்தனை மூலம் மக்கள் பெறமுடிகிறது.தமிழக அரசு கேபிள் டி.வி.,நிறுவனம், கேபிள் டி.வி.,ஒளிபரப்பு மட்டு மின்றி அனைத்து மாவட்டங்களிலும் இ- சேவை மையங்கள், ஆதார் மையங்களையும் செயல்ப டுத்தி வருகிறது.
ஆதார் மையங்களில் ஆதார் கார்டில் பல்வேறு திருத்தங்களுக்கு விண்ணப்பித்தல், இ-சேவை மையங்களில் வருவாய்த்துறை, பதிவுத்து றை சார்ந்த சான்றுகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்க ப்படுகின்றன. இதற்கான கட்டணம் மக்களிடமிருந்து ரொக்க மாகவே பெறப்ப ட்டு வருகிறது.
அரசு கேபிள் டி.வி., நிறுவனம் தற்போது தனது கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதார் மற்றும் இ-சேவை மையங்களில் பணமில்லா பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் 3 மண்டல அலுவலகங்கள் என 14 இடங்களில் அரசு கேபிள் நிறுவனத்தின் இ- சேவை மற்றும் 9 தாலுகா அலுவலகங்களில் ஆதார் மையங்கள் இயங்குகின்றன.
இம்மையங்களில் கடந்த 3 நாட்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வந்துள்ளது.அரசு கேபிள் டி.வி., நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள இ-சேவை, ஆதார் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக இ- சேவை, ஆதார் மையங்களுக்கு பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்படுகிறது.
டெபிட், கிரெடிட் கார்டை மெஷினில் ஸ்வைப் செய்வதன் மூலமாகவோ, க்யூ.ஆர்., கோடு ஸ்கேனிங் மூலமாகவோ கட்டண தொகையை எளிதாக செலுத்த முடியும்.ஆனாலும் முதியவர்கள் உட்பட டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து தெரியாதோரிடம் கட்டண தொகை வழக்கம்போல் பணமாக பெறப்படும் என்றனர்.
- டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேகம் எடுக்கும் முன்பு ஆண்டுதோறும் 250 வழக்குகள் வரை பதிவாகி வந்துள்ளது.
- லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவதில்லை.
சென்னை:
லஞ்சம் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கிற வாசகங்களை அரசு அலுவலகங்களில் அதிகம் பார்த்திருப்போம்.
கொட்டை எழுத்துக்களில் பெரிதாக பொறிக்கப்பட்டிருக்கும் இந்த லஞ்சத்துக்கு எதிரான வார்த்தைகளை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
தங்களது வேலை முடிந்தால் போதும் என நினைத்து லஞ்சம் கொடுப்பதற்கு தயங்காத பொது மக்கள்....
கடமையைச் செய்வதற்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் என அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்தாடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதால் அதன் மூலமாகவே லஞ்ச பணமும் கைமாறி விடுகிறது.
அரசு அலுவலகத்தில் வைத்தோ அல்லது வெளி இடங்களில் வைத்தோ லஞ்சம் வாங்கினால் ஆபத்து என நினைத்து ஆன்லைன் மூலமாக பணத்தை அனுப்பி விடுங்கள். நான் வேலையை முடித்து தருகிறேன் என் வாக்குறுதி அளிக்கும் அரசு அலுவலர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமே லஞ்ச பணத்தை பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதனால் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவதில்லை. இது லஞ்ச வழக்குகளை கையாளுவதில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பெரிய சவாலாகவே மாறியிருக்கிறது.
இதன் காரணமாக லஞ்ச வழக்குகளும் குறைவாகவே பதிவாகியுள்ளன. சென்னையை பொறுத்தவரை இந்த ஆண்டில் மே மாதம் வரையில் மொத்தம் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பல்லாவரத்தில் மட்டும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டில் லஞ்ச புகார்கள் தொடர்பாக 74 வழக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் 2020-ல் 67 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 44 வழக்குகளும், 2022-ல் 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேகம் எடுக்கும் முன்பு ஆண்டுதோறும் 250 வழக்குகள் வரை பதிவாகி வந்துள்ளது. இதில் சுமார் 120 வழக்குகள் வரையில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட வழக்குகள் ஆகும்.
இந்த ஆண்டு இதுவரையில் தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் எந்த லஞ்ச வழக்குகளும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் வடக்கு மண்டலத்துக்குட் பட்ட கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடலூரில் அதிகபட்சமாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதே போல மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அளவிலான வழக்குகளே பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பம் இல்லாத ஒருவர் புகார் அளிக்கும் பட்சத்தில், லஞ்சம் கேட்கும் நபரிடம் அவரை பேச சொல்லி அது தொடர்பான ஆடியோவை பதிவு செய்து வைத்துக் கொள்ள முதலில் அறிவுறுத்துவோம். பின்னர் லஞ்சமாக கொடுக்கும் பணத்தில் ரசாயன பவுடரை தடவி கொடுத்து அந்த பணத்தையே லஞ்சம் கேட்கும் நபரிடம் கொடுக்கச் சொல்லி கையும் களவுமாக பிடித்து கைது செய்வோம்.
இந்த முறையில் லஞ்சம் வாங்கும் நபருக்கு தண்டனை வாங்கி கொடுப்பது எளிதாக இருக்கும்.
தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாகவும் லஞ்சம் வாங்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.