search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி சூர்யா"

    • உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது.
    • நீங்கள் என்ன என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம்.

    தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 20-ந்தேதி நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் திருச்சி சூர்யா எக்ஸ் தளத்தில்,

    உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

    என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா?

    அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும்போது தான் தெரியும்.

    அதிகபட்சம் அமார் பிரசாதையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார்.

    கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே... எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்... என்று தெரிவித்துள்ளார்.

    • மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
    • கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராம சீனிவாசன் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    பாஜக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராம சீனிவாசன் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது. திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ களமிறங்குகிறார். அவரை எதிர்த்து, பேராசிரியர் இராம. சீனிவாசனை களத்தில் இறக்குவது பற்றி பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக சொல்லப்பட்டது.

    பாஜகவின் இந்த முடிவை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "வரும் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இராம. சீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாறாக, மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இப்படிக்கு - பாஜகவின் உண்மைத் தொண்டன் திருச்சி சூர்யா' எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ராம ஸ்ரீனிவாசன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் மண்ணுக்கான மைந்தன் என திருச்சி சூர்யாவின் பெயரை குறிப்பிடாமல் ராம சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

    • தி.மு.க. எங்களை பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும்.
    • எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துவிட்டோம்.

    திருப்பூர் :

    பா.ஜ.க.வில் சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரத்தில் டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    சமீபத்தில் வெளியான ஆடியோ விஷயம், எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். ஆனால் பா.ஜனதாவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்களது பிரச்சினையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் நாங்கள்.

    இந்த ஆடியோ சம்பவம் கண்பட்டது போல் அரங்கேறிவிட்டது. தனிப்பட்ட முறையில் இருந்தாலும், பொது தளத்தில் இருந்தாலும் ஆடியோ வெளியானதால், இருவரும் எங்களுடைய கருத்தை தெரிவித்துவிட்டோம். எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துவிட்டோம். எங்கள் தரப்பில் இருந்து ஆடியோ வெளியாகவில்லை. அது குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தணிக்கை செய்து வருகிறது.

    நாங்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்பதால், குடும்பமாக பழகி வந்தோம். அக்கா, தம்பியாக பழகுகிறோம். இனியும் அதே நிலை தொடரும். ஆடியோ விவகாரம், சின்னதொரு அசாம்பாவிதம் தான். கே.டி.ராகவன் இன்று வரை கட்சி பணியை தொடரவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் திருச்சி சூர்யா, "கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். கட்சியின் வெளிப்படைத்தன்மை இது. ஆனால் தி.மு.க.வில் அப்படி இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர், இன்றைக்கு தி.மு.க. அமைச்சர்களாக உள்ளனர். தி.மு.க. எங்களை பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும்." என்றார்.

    ×