என் மலர்
நீங்கள் தேடியது "சரிந்து வரும் நீர்மட்டம்"
- தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 639 கன அடியாக குறைந்துள்ளது.
- இன்று காலை முதல் 1719 கன அடி நீர் திறக்கப் படுகிறது.மேலும் நீர் மட்டம் 67.67 அடியாக சரிந்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டபோதும், அணையின் நீர் மட்டம் 70 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டது.
தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 639 கன அடியாக குறைந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 1819 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது.மேலும் நீர் மட்டம் 67.67 அடியாக சரிந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 138.20 அடியாக உள்ளது. 388 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.60 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.