search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமை கருவேல"

    • சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையம் கிராம பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பரந்து, விரிந்து ஓங்கி நின்றபடி உள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் செல்லும் போது நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மேலும் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் தேங்கி மேலே எழும்பி அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய விளை நிலங்களில் புகுந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும் அபாயம் சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேலும் சீமை கருவேல மரங்களின் வேர்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது. மேலும் காற்று மண்டலம் முழுவதும் நச்சுத்தன்மை ஆக்கி சுற்று பகுதி முழுவதும் பரவும் ஆற்றல் கொண்டது.

    நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சீமை கருவேல மரங்களை முற்றிலும் வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று விவசாயிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×