search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட் கார்டு"

    • டாடா, அருவி உள்ளிட்ட படங்களில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்
    • தனது நீண்ட நாள் காதலியை அவர் விரைவில் கரம்பிடிக்க போகிறார்.

    பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார். சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

    இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் அப்போது ட்ரெண்டானது. அந்த சமயத்தில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் பிரதீப்புக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தனது நீண்ட நாள் காதலியை அவர் விரைவில் கரம்பிடிக்க போகிறார்.

    டாடா, அருவி உள்ளிட்ட படங்களில் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
    • வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.

    அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.

    அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.

    ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.

    காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.

    சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

    இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.

    பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹென்னிஸி தனது பாக்சை விட்டு வெளியே பாய்ந்து வந்து பந்தை தடுக்க முயன்றார்.
    • உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174வது ரெட் கார்டு ஆகும்.

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் வேல்ஸ் கோல்கீப்பர் ஹென்னிஸி நடுவரால் ரெட் கார்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் தடுப்பாட்டத்தை தகர்த்த ஈரான் வீரர் மெஹ்தி தாரெமி, பந்தை துரத்திக்கொண்டு கோல் கம்பத்தை நெருங்கினார். ஆபத்தை உணர்ந்த ஹென்னிஸி, அவரது எல்லையை விட்டு வெளியே பாய்ந்து வந்து, தாரெமிக்கு முன்னதாக பந்தை தடுக்க முயன்றார். அதற்குள் தாரெமி அடித்த பந்து ஹென்னஸியை தாண்டி சென்றுவிட்டது.

    அதேசமயம் வந்த வேகத்தில் ஹென்னிஸி, தாரெமியை உதைக்க, இருவரும் கீழே விழுந்துவிட்டனர். விதிமுறை மீறலை கவனித்த போட்டி நடுவர் மரியோ எஸ்கோபார், ஹென்னிஸிக்கு முதலில் மஞ்சள் அட்டை காட்டினார். ஆனால் வீடியோ மானிட்டரைப் பார்த்த அவர், பின்னர் தனது முடிவை மாற்றி, ரெட் கார்டு காண்பித்தார். இதையடுத்து ஹென்னிஸி சோகத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இந்த உலகக் கோப்பையில் முதல் ரெட் கார்டு இதுவாகும்.

    உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174வது ரெட் கார்டு ஆகும். உலகக் கோப்பையில் ரெட் கார்டு பெற்ற மூன்றாவது கோல் கீப்பர் ஹென்னிஸி ஆவார். இதற்கு முன்பு 2010ல் தென் ஆப்பிரிக்காவின் இடுமெலங் குனே, 1994ல் இத்தாலி கோல் கீப்பர் ஜியன்லுகா பக்லியுகா ஆகியோர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×