என் மலர்
நீங்கள் தேடியது "தவிக்கும் தேனி மாணவி"
- 2021-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 214 மதிப்பெண் பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மதுரை தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.
- எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம் கிடைத்தும் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறேன். குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உதவ வேண்டும் என்றார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துச்செல்வி. இவர்கள் மகள் யோகிதா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். கடந்த 2021-ம் ஆண்டு பொதுத்தேர்வில் 600-க்கு 531 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
ஆசைத்தம்பிக்கு உடல்நக்குறைவு ஏற்பட்டதால் முத்துச்செல்வி கூலி வேலைக்கு சென்று மகளை படிக்க வைத்து வருகிறார். 2021-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 214 மதிப்பெண் பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மதுரை தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு படித்து க்கொண்டே நீட் தேர்வுக்கும் தயாராகினார். இந்த ஆண்டு 270 மதிப்பெண் பெற்று கலந்தாய்வில் கலந்து கொண்டார். இதில் மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது. வருகிற 29-ந் தேதிக்குள் சேர வேண்டும். தற்போது படிக்கும் கல்லூரியில் சான்றிதழ்களை கேட்டபோது தேர்வு கமிட்டியிடம் தடையில்லா சான்று பெற்று வர கூறினர்.
இதனால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் தவித்து வருகிறார். இது குறித்து மாணவி யோகிதா கூறியதாவது:-
கலந்தாய்வின்போது கல்லூரியில் இருந்து விலகினால் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்க இயலும் என்றனர். இது முன்பே தெரிந்திருந்தால் பல் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுக்காமல் இருந்திருப்பேன். தற்போது நான் ஆசைப்பட்ட எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம் கிடைத்தும் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறேன். எனவே குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உதவ வேண்டும் என்றார்.