search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு சீருடைப் பணியாளர்"

    • இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை, தீயணைப்பு வீரர் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த தலை நகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது.
    • வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம் திருவிகா சாலையில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்டத்தில்11 மையங்களில் 15670 தேர்வு எழுதினர் 

    விழுப்புரம்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை, தீயணைப்பு வீரர் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த தலை நகரங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் 15670பேர் தேர்வு எழுதுகின்றனர். விழுப்புரம் நகரில் அரசு எம்ஜிஆர் மகளிர் கல்லூரி, மற்றும் தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் 3141மகளிர் தேர்வு எழுதுகின்றனனர். மேலும் விழுப்புரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 7 இடங்களிலும் மற்றும் திண்டிவனத்தில் 2 மையங்களிலும் ஆண்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 1800 காவல் துறையை மற்றும் 140 அமைச்சு பணியாளர்கள் என மொத்தம்1940பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தேர்வுக்கான அனைத்து பணிகளையும் விழுப்புரம்எ ஸ்பி ஸ்ரீநாதா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இன்று நடைபெற்றது. இத்தேர்வினை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம் திருவிகா சாலையில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தினை பார்வையிட்டார் அவருடன் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா , ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×