என் மலர்
நீங்கள் தேடியது "தில் ராஜூ"
- விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் தயாராகியுள்ளது.
- ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 'வாரிசு' படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளதால், வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருந்தனர்.

வாரிசு
இதனிடையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

வாரிசு
விஜய்யின் வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்திருந்தார்.

வாரிசு
இந்நிலையில், வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என்றும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 'வாரிசு' அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
- சோதனை நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பிரபல தயாரிப்பாளர்களான தில்ராஜு, நவீன் எர்னேனி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ளது.
தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங் களை தயாரித்து உள்ளார். நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார்.
தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக சமீபத்தில் அவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டார். தில் ராஜுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் ஐதராபாத் பெருநகர பகுதியிலேயே அமைந்து உள்ளன.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை 5 மணிக்கு அதிரடியாக புகுந்தனர்.
இந்த இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் தில் ராஜுவின் சகோதரர் சிரிஷ், மகள் ஹன்சிதா ரெட்டி ஆகியோரின் வீடுகள் ஜூப்ளிகில்ஸ் மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளன. அந்த இடங்களிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் தில் ராஜுவுடன் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.
மேலும் சமீபத்தில் வெளியான பான் இந்தியா படமான புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளர் நவீன் எர்னேனியின் வீட்டில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
ஐதராபாத்தில் இன்று ஒரே நாளில் 2 தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான 8 இடங்களில் 55 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஜுப்ளிஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சோதனை நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தில் ராஜு இந்த மாதம் சங்கராந்தி பண்டிகையையொட்டி 2 படங்களைத் தயாரித்தார். பான்-இந்தியா திரைப்படமான கேம் சேஞ்சர் மற்றொரு வெளியீடான சங்கராந்திகி வஸ்துன்னம் படங்கள் வசூல் சாதனைகளை முறியடித்து குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி வருகிறது.
பிரபல தயாரிப்பாளர்களான தில்ராஜு, நவீன் எர்னேனி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ளது.
இதனால் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறைகேடாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் புஷ்பா-2 வெளியானபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
தற்போது புஷ்பா-2 தயாரிப்பாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 'புஷ்பா 2' முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
- நேற்று 'புஷ்பா 2' தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.
இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1850 கொடுக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத் விமானநிலையத்தில் இருந்து இயக்குநர் சுகுமாரை அவரது வீட்டிற்கு அழைத்து வந்த வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது என்ன கிடைத்தது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.