என் மலர்
நீங்கள் தேடியது "லட்சுமணன்"
- கண் மூடி தியானித்து “ராம், ராம்” என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை.
- அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள்.
எந்த நேரமும் தன்னை மறந்து ஸ்ரீராம தியானத்தில் இருக்கும் அனுமானுக்கு, தன்னைத் துதிப்பதை விட தனது இறைவன் ஸ்ரீராமனைத் துதிப்பதே பிடிக்கும்.
எனவே, அனுமானைப் பூஜித்து எவ்வளவு தடவை முடியுமோ, அவ்வளவு தடவைகள் "ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெயராம்!" என்ற மந்திரத்தை, குரு உபதேசம் பெற்று ஜெயிப்பது நல்லது.
அனுமானை வழிபடுபவர்கள், பூஜை நேரத்திலும் இதர முக்கிய புண்ணிய தினங்களிலும் கண்டிப்பாக, பிரம்மச்சர்ய விரதம் மற்றும் புலனடக்கம் அனுஷ்டிக்க வேண்டும்.
அசைவ (புலால்) உணவை முழுமையாக ஒதுக்குங்கள்.
இதுவும் கண்டிப்பான நிபந்தனை! வடைமாலை மற்றும் வெற்றிலை மாலையை, காரிய சித்திக்காக அனுமானுக்கு சாற்றலாம்.
தினசரி "ஸ்ரீராமஜெயம்" முடிந்தவரை எழுதலாம்.
அனுமானின் வாலுக்கு, 1 மண்டலம் (48 நாட்கள்) சந்தனக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டே வந்து இறுதி நாளில், விசேஷ பூஜை செய்து காரிய சித்தி அடையலாம்.
கண் மூடி தியானித்து "ராம், ராம்" என்று சொன்னாலே போதும்! அனுமானுக்கு இதை விட பிரியமானது எதுவும் இல்லை.
தியாகராஜ சுவாமிகள் 96 கோடிகள் இம்மந்திரத்தை ஜெபித்து, ஸ்ரீராமதரிசனம் பெற்றார்!
- நோய்கள் நீங்க தினமும் "ராம ராம" என்று 108 முறை சொல்லலாம்.
- தினமும் 108 முறை கீழ்கண்ட ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி ஆஞ்சநேயரை வேண்டி கொள்ளலாம்.
நோய்கள் நீங்க தினமும் "ராம ராம" என்று 108 முறை சொல்லலாம். இப்படி மனதளவில் "ராம ராம" என்று சொல்லி ராமரை வேண்டுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தை முழுவதும் ஒரு முறை கூறுவதற்கு சமமாகும்.
ஆஞ்சநேயர் மந்திரம்
வெற்றிகளை பெற தினமும் 108 முறை கீழ்கண்ட ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி ஆஞ்சநேயரை மனதில் வேண்டி கொள்ளலாம்.
மந்திரம் வருமாறு:
ஓம் ஆஞ்சநேய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமந் ப்ரசோதயாத்
- அங்கே அசோகவனத்தில் சீதையை கண்டார்.
- அனுமார் சீதைக்கு பிடித்த செம்மண்ணை அவரும் உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.
ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி அனுமார் இலங்கை சென்றார்.
அங்கே அசோகவனத்தில் சீதையை கண்டார். ராமர் நலமாக உள்ளாரா? என்று சீதை அனுமாரிடம் கேட்க,
அவர் எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்று அனுமார் கூறியுள்ளார்.
இதனை கேட்ட சீதை மகிழ்ச்சி அடைந்து தரையில் இருந்த செம்மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்.
இதனை பார்த்த அனுமார் சீதைக்கு பிடித்த செம்மண்ணை அவரும் உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.
இதனால் அவருக்கு செந்தூரகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
- சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார்.
- அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டார்.
ராமன் ராவணன் யுத்தம் நடந்தபோது ராமரையும், லட்சுமணனையும் தோளில் சுமந்து கொண்டு அனுமார் சென்றுள்ளார்.
அப்போது ராவணன் சரமாரியாக அம்பு எய்தினார்.
சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார்.
அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டார்.
அதுபோல, வெண்ணை விரைவில் உருகும் தன்மை கொண்டதால் அந்த வெண்ணை உருகுவதற்கு முன்னதாகவே, நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.
இதனாலேயே பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்கின்றனர்.
- அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம்.
- ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
நவக்கிரகங்களின் அங்கமாக விளங்கும் ராகுவும், சனியும் ஒரு முறை ஆஞ்சநேயரிடம் தோல்வி அடைந்து உள்ளனர்.
அதனால், அவர்கள் ஆஞ்சநேயருக்கு கீழ் படிந்தவர்களாக உள்ளனர்.
புவியில் சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ராகுவுக்கான உளுந்தும், சனிக்கான எள் எண்ணையும் சேர்த்து செய்த வடைமாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபாடு நடத்தலாம்.
அவ்வாறு செய்வதால் சனி, ராகு இடையூறுகளில் இருந்து மனிதர்கள் விடுபடலாம்.
அதன் காரணமாக ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.
நோய் தீர்க்கும் துளசி தீர்த்தம்
ஆஞ்சநேயருக்கு நோய் நீக்கும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
பக்தர்களுக்கு துளசி தீர்த்தமும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
- உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.
- ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.
அனுமன் மந்திரம் வருமாறு:
ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாய
லங்கா வித்வம்ஸனாய: அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய,
ஸாகினீடாகினீவித்வப்ஸனாய, கிலகிய பூபூ காரினே
விபீக்ஷணாய, ஹனுமத் தேவாய, ஓம் ஐம்
ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா
அனுமன் மந்திரத்தின் பொருள் வருமாறு:
செயற்கரிய செயல்புரியும் என் சுவாமியே(ஆஞ்சநேயரே), உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர்.
ஸ்ரீ ராமதூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும்.
- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.
- நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.
முத்தங்கி, வெண்ணை காப்பு, சந்தன காப்பு அலங்காரமும், புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்படுகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமி அருள் கிடைக்கும்.
வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு ஏற்படும்.
சங்கடங்கள் நீங்கும்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், மனதில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.
மனக்குழப்பம் தீரும். அறிவாற்றல் பெருகி மகிழ்ச்சி ஏற்படும்.
திருமணம் கைகூடும்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவித்து அவரை தரிசனம் செய்தால், நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
அதேபோல், நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
நோய்களைத் தீர்க்கும் வெண்ணைகாப்பு
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கும்.
சந்தனக்காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமியின் அருள் கிட்டும்.
புஷ்ப அங்கி அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், மனதில் நினைத்தவை விரைவில் நிறைவேறும்.
3 மாதங்களுக்கு மட்டுமே வெண்ணை காப்பு
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு குளிர் காலத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
எல்லா நாட்களிலும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
வடைமாலை
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் வடைமாலை சாற்றப்படுகிறது.
பொது அபிசேகமும் நடத்தப்படுகிறது.
அமாவாசை நாட்களில் சிறப்பு அபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
- திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று.
- இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
திருச்செந்தூர் கடல் பகுதியில் இருந்து தென் இலங்கை மிக அருகாமையில் அமைந்துள்ளது.
திருச்செந்தூரின் கடலோரத்தில் உள்ள 24 தீர்த்தங்களில் சேது தீர்த்தமும் ஒன்று.
இங்கிருந்து தான் அனுமன் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டால் சேதுசமுத்திர திட்டம் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவேறும் என்ற கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் எடுத்து கூறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்துக்கு அருகாமையில் அமைந்திருப்பது வட இலங்கை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் ஆகும்.
காரிய சித்தி ஆஞ்சநேயர்
உன்னதமான இந்தப் படத்தை பூஜா மண்டபத்தில் வைத்திருந்தாலே சகல தோஷங்களும் விலகி, சத்ருபயம் நீங்கி சகல சம்பத்தும், ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது சாஸ்திர விதி.
- ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்
- அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை
கோபி அருகே கூகலூர் ஆஞ்சநேயரை மகப்பேறு இல்லாதவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவரை வழிபட்டு நற்பலனை பெறுகிறார்கள்.
ஆறடி உயரத்தில் கருங்கற்சிலையாக கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார் அனுமன்.
உடல்நலம் சரியில்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இங்கே வந்து, வடைமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் நலம் பெறுவர் என்பதும் தன்னம்பிக்கையாக இருக்கிறது.
சுற்று வட்டாரத்தில் இருக்கும் வியாபாரிகள் பலர், தினமும் கடை திறப்புக்கு முன் கடைச்சாவியை இவரது திருவடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.
அப்படி செய்தால் அன்றைய தினம் லாபம் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
- இனிப்புடன் 16 வகைக் காய்கறிகளுடன் வடை, அப்பளம், பாயசம் என்று உணவு வழங்கப்படுகிறது.
- சிலர் அந்த இலைகளைத் தலைமேல் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.
முசிறியை அடுத்த காட்டுப்புத்தூர் அருகில் உள்ள நாகையநல்லூர் என்னும் திருத்தலத்தில் கொண்டாடப்படும் ஸ்ரீராமநவமி உற்சவம் சற்று வித்தியாசமானது.
விழாவை முன்னிட்டு தினமும் உபன்யாசம், நடிப்புடன் கூடிய கதா காலட்சேபம் ஆகியவை சிறப்புற நடைபெறும்.
இந்த விழாவின் கடைசி நாள் அன்று சீதா ராம திருக்கல்யாணம் நடைபெறும்.
அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்படும்.
இந்த விருந்தில் கலந்து கொண்டாலே நம் பாவங்கள் நசிந்து புண்ணியம் சேரும் என்கிறார்கள்.
தார்சாலையில் சுமார் 200 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட பந்தலின் கீழ் எவ்விதத் தரை விரிப்பும் இன்றி பக்தர்கள் வரிசையாக அமர்ந்து கொள்வார்கள்.
அனைவருக்கும் தலைவாழை இலை போடப்படும்.
இனிப்புடன் 16 வகைக் காய்கறிகளுடன் வடை, அப்பளம், பாயசம் என்று உணவு வழங்கப்படுகிறது.
அத்துடன் விருந்து உண்ணும் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் தட்சணை வழங்குகிறார்கள்.
விருந்து சாப்பிட்டதும் இலையை மூடக்கூடாது.
அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் சிலர் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக அந்த இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள்.
சிலர் அந்த இலைகளைத் தலைமேல் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.
இத்திருமண வைபவத்தில் ஸ்ரீஆஞ்சநேயருடன் முனிவர்கள், தேவர்கள் ஆகியோர் மானசீகமாக விருந்தில் கலந்து கொண்டு அடியார்களாக சாப்பிட்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை.
அதனால் அவர்கள் சாப்பிட்ட இலைகளில் குறிப்பாக அனுமனும் சாப்பிட்டிருப்பதால் அந்த இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள்.
இதனால் ராமனின் திருவருள் எளிதில் கிட்டும் என்பது ஐதீகம்.
- வெண்ணை உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார்.
- அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.
ராவணன் சம்ஹாரத்திற்கு பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களை சம்ஹாரம் பண்ணக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமன் கடவுளே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு பண்ணி அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசிர்வாதம் பண்ணி அளித்தார்கள்.
ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் மற்ற கடவுள்களும் சக்தி வாய்ந்த மற்ற ஆயுதங்களையும் அளித்தார்கள்.
ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணை அளித்து "இந்த வெண்ணை உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்" என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
அதன்படி அனுமன் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணை உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து விட்டார்.
ஆகவே அதேபோல நாம் வெண்ணை சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணை உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
- ஒரு வடை சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம். களைப்பில்லாமல் இருக்கலாம்.
- உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.
உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது.
ராம கைங்கரியத்திலேயே சதா ஈடுபாடுடன் இருந்து வருபவரும் ஓயாமல் உழைத்து வருபவரமான ஆஞ்சநேயருக்கு உணவருந்தவே அவகாசம் கிடைக்கவில்லை.
ஆதலால் அனுமானின் தாய் அஞ்சனாதேவி தன் மகனுக்கு வடை ஒன்றை அளித்து அவரது களைப்பைப் போக்கினாள்.
ஒரு வடை சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம். களைப்பில்லாமல் இருக்கலாம்.
ஆகவேதான் வடைமாலை சாத்தும் கைங்கரியம் செய்யப்படுகிறது.
அனுமார் ராவணப் படையுடன் செய்த போர்களில் உடல் முழுவதும் துளைகள் உண்டாகி விட்டன.
ஆனால் துளைகளை அனுமாரின் மருத்துவ சக்தியினால் குணம் அடைய செய்து விட்டார்.
ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி வடைமாலை சாத்துகிறோம் என்றொரு ஐதீகம் உள்ளது.