என் மலர்
நீங்கள் தேடியது "போதையில் டிரைவர்"
- டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால், சப்.இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், திருநள்ளாறு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வெளி மாநில பதிவு எண் கொண்ட கிரேன் வாகனம் ஒன்று வேகமாக வந்தது. உடனே அதை நிறுத்தி டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், மத்திய பிரதேசம், கந்த்வாணி மாவட்டம், ஜூவான் வெல் பெக்ல்யா மகன் ரமேஷ் முஜ்ஹஸ்டா சிங் (வயது39) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர். பின்னர், அவரை, காரைக்கால் கேர்ட்டில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நீதிபதி லிசி, மது போதையில் கிரேன் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.