என் மலர்
நீங்கள் தேடியது "புதிய கட்டிங்கள்"
- ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது.
- இதற்கான பூமி பூஜை நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற மேம்பாட்டிற்கு தனித்துவமளித்து அதற்கான அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், புதிய அலுவலக கட்டிடத்திற்கான பணிகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, சிங்கம்புணரி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களுக்கும், புதிய அலுவலகக் கட்டிடங்கள் அமைப்பதற்கும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலும், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் அமைப்பதற்கும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, 600-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி செயலகம் தமிழகம் முழுவதும் அமைப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
அந்த ஊராட்சி செயல கத்தில் கிராம நிர்வாக அலுவலகம், இணையதள சேவை, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அறை, கூட்டரங்கம் மற்றும் அலுவலர்கள் பிரிவிற்கான தனி அறை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், கிராம பகுதிகளில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பழமையான கட்டி டங்களை இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், சிங்கம்புணரி வட்டம், உரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பயனாளிக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகைக்கான ஆணையைஅமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவர் கோகிலாராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் லதாஅண்ணாதுரை, நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் புசலான், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீனாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரவி, மதிவாணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், வட்டாட்சியர்கள் திருப்பத்தூர் வெங்கடேசன், சிங்கம்புணரி சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயக்குமார், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.