என் மலர்
நீங்கள் தேடியது "புதைவட"
- பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
திருப்பூர் :
அங்கேரிபாளையம் மின்சார வாரியம் சாா்பில் புதைவட கேபிள் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் ஜீவா காலனி நுழைவு வாயில் அருகில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், மின்சார வாரியம் சாா்பில் அப்பகுதியில் பழுதடைந்துள்ள புதைவட கேபிள்களை சீரமைக்கும் பணி இன்று தொடங்கி குறுகிய காலத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, பணி நடைபெறும்போது பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்