search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் மது ஆலை"

    • கண்மாயில் கழிவு நீரை திறந்துவிடும் தனியார் மது ஆலையை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • நடவடிக்கை எடுப்பதாக சிவகங்கை தாசில்தார் உறுதியளித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள உடைகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மது மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு பின்புறம் உடைகுளம் கிராமத்திற்கு சொந்தமான 160 ஏக்கர் விவசாய நிலமும், அதற்கு நீர்வள ஆதாரமாக திகழும் கண்மாயும் உள்ளது.

    மது ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அந்த கண்மாய்க்குள் திறந்து விடுகின்றனர். இதனால் கண்மாய் நீரின் தன்மை மாறுவதுடன் நிலத்தடி நீரும் மாசு பட்டு உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் பல ஆண்டுகளாக விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இந்த நீரை அருந்தினால் இறந்துவிடுவதால் மேய்ச்சலுக்காக அழைத்து செல்ல முடியாத நிலை யும் ஏற்பட்டுள்ளது. இந்த மது ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் பழுதாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று கனரக வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார்கோவில் தாசில்தார் கிராம மக்களை சமாதானம் செய்ததுடன், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மது ஆலை அதிகாரி களிடம் விசாரணை நடத்திய தாசில்தார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    ×