என் மலர்
நீங்கள் தேடியது "நெட்ஃப்ளிக்ஸ்"
- மும்பையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்ற முதியவர் சைபர் மோசடியில் சிக்கி இருக்கிறார்.
- இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்கள் 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் சந்தாவை புதுப்பிக்க முயன்று சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மோசடியில் மும்பையை சேர்ந்த முதியவர் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய புகார் மும்பையை அடுத்த ஜூஹூ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
காவல் நிலைய தகவல்களின் படி, முதியவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் ஆட்டோ-ஜெனரேட் செய்த மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிப்பதற்கான நினைவூட்டல் தொடர்பான தகவல் இடம்பெற்று இருந்தது. அதில் அவர் மாதாந்திர கட்டணமான ரூ. 499 செலுத்தி ஸ்டிரீமிங் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மின்னஞ்சலுடன் வந்த இணைய முகவரியை 73 வயதான நபர் க்ளிக் செய்துள்ளார்.

இவர் க்ளிக் செய்ததும் திறந்த மற்றொரு வலைப்பக்கத்தில் இவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்து நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்-ஐ புதுப்பிக்கலாம் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் இவரது மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒடிபி) அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான குறுந்தகவலில் தொகையை சரியாக பார்க்காமல், முதியவர் ஒடிபி-யை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செய்ததும், அவரின் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் உடனடியாக காணாமல் போய்விட்டது.
சைபர் செக்யுரிட்டி வல்லுனர்கள், சட்ட நிறுவனங்கள் பொது மக்களிடம் ஒடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி சார்பில் இவ்வளவு பெரிய தொகைக்கான பரிவர்த்தனையை உண்மையில் நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்வியுடன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த அழைப்பில் தான் முதியவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்களை பற்றிய தகவல் தெரிவிக்கும் முனையத்தில் புகார்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
- நெட்ஃப்ளிக்ஸ் உலகளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஒடிடி தளமாக விளங்குகிறது.
- கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்துவதை தாமதப்படுத்தி வந்த திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் அடுத்த ஆண்டு செயல்படுத்த இருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. பாஸ்வேர்டு ஷேரிங் வியாபாரத்தை நிறுத்தும் முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதற்கு முடிவுகட்டும் இலக்கை நெட்ஃப்ளிக்ஸ் அடைய இருக்கிறது.
அடுத்த ஆண்டு துவக்கம் முதலே நெட்ஃப்ளிக்ஸ் அதன் பயனர்கள் பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க போவதில்லை. இது குறித்த தகவலை தி வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்களது குடும்பத்தார் தவிர வெளியில் உள்ள நண்பர்கள் மற்றும் வேற்று நபர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படாது. பாஸ்வேர்டு ஷேரிங்கை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகளை நெட்ஃப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாக கண்டறிந்து வருகிறது.

நெட்ஃப்ளிக்ஸ் சந்தா முறை அறிவிக்கப்பட்டதில் இருந்தே பாஸ்வேர்டு ஷேரிங் பெரும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும், சந்தாதாரர்கள் குறைய துவங்கும் வரை இந்த பிரச்சினை குறித்து நெட்ஃப்ளிக்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்த ஆண்டு வருவாய் சரிய துவங்கியதில் இருந்து பாஸ்வேர்டு ஷேரிங்கிற்கு முடிவு கட்ட நெட்ஃப்ளிக்ஸ் தீவிரமாக செயல்பட துவங்கி இருக்கிறது.
சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பாஸ்வேர்டு ஷேரிங்கை நிறுத்தவும் நெட்ஃப்ளிக்ஸ் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது. இதன் பகுதியாகவே நெட்ஃப்ளிக்ஸ்-இல் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மாதம் 6.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் நெட்ஃப்ளிக்ஸ் - மொபைல் ஒன்லி, பேசிக் பிலான், ஸ்டாண்டர்டு பிலான் மற்றும் பிரீமியம் பிலான் என நான்கு சந்தாக்களை வழங்கி வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 149, ரூ. 199, ரூ. 499 மற்றும் ரூ. 649 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- நெட்ஃப்ளிக்ஸ் ஸ்டிரீமிங் தளத்தின் சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
- விலை மாற்றம் மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் புதிய சந்தா தொகுப்புகளை அறிவித்து இருக்கிறது.
உலகளவில் முன்னணி ஒடிடி தளமாக இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தனது விலையை 50 சதவீதம் வரை குறைத்து விட்டது. உலகின் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு வட அமெரிக்காவில் சந்தா விலையை உயர்த்திய நிலையில், தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கிற்கு பிந்தைய மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கும் விதம் மாறி இருக்கிறது. இதற்கு ஏற்ப வருவாய் மற்றும் சந்தாதாரர் வளர்ச்சியை நெட்ஃப்ளிக்ஸ் அதிகப்படுத்த பல்வேறு வழிகளை பரிசோதனை செய்து வருகிறது.
தற்போதைய விலை குறைப்பு மத்திய கிழக்கு, துணை சகாரா ஆப்ரிக்க பகுதிகள், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் டிஸ்னி பிளஸ், ஹூலூ மற்றும் ஸ்லிங் டிவி உள்ளிட்டவை தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்திய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தற்போது விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
விலை குறைப்பு மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களின் லாக்-இன் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோருக்கு புதிய மாதாந்திர கட்டணத்தை அறிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் IP முகவரிகள், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்து கடவுச்சொல் பகிரப்படுவதை தடுக்க முயற்சித்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் விதிகளின் படி ஒரே கடவுச்சொல்லை பலர் பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்தது.
புதிய கட்டண முறை லத்தீன் அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. புதிய கட்டணம் கனடா மற்றும் நியூசிலாந்தில் 8 டாலர்கள், போர்ச்சுகலில் 4 டாலர்கள், ஸ்பெயினில் 6 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டே அமலுக்கு வர இருக்கிறது.
- பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துகிறது.
- கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் சேவையில் பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைக்கு முற்றிப்புள்ளி வைக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த நடவடிக்கையை சில நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே துவங்கி விட்டது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை காரணமாக சுமார் பத்து லட்சம் பயனர்களை நெட்ஃப்ளிக்ஸ் இழந்துள்ளது. 2023 முதல் காலண்டில் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் பத்து லட்சம் பயனர்களை இழந்துள்ளது என்று ஆய்வு நிறுவனமான கந்தர் தெரவித்து இருக்கிறது. பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துவதால், பயனர் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகளை கடந்த பிப்ரவரி மாத வாக்கில் ஸ்பானிஷ் பயனர்களிடையே நெட்ஃப்ளிக்ஸ் செயல்படுத்தியது. மேலும் 5.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 500 கட்டணம் கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.
ஜியோ நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 1099 மற்றும் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு புதிய சலுகைகளும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகின்றன. இவற்றில் முறையே ரூ. 149 மற்றும் ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.
இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 5ஜி டேட்டா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரூ. 1099 ஜியோ சலுகையுடன் நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் திரைப்படங்களை 480 பிக்சல் ரெசல்யூஷனில் பார்க்க முடியும்.

இந்த சலுகையில் வழங்கப்படும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா கொண்டு ஒற்றை மொபைல் சாதனம் அதாவது ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது டேப்லெட் உள்ளிட்டவைகளில் மட்டுமே தரவுகளை பார்க்க முடியும். மற்ற பலன்களை பொருத்தவரை 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதி ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ. 1499 சலுகையிலும் நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் விரும்பிய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை 720 பிக்சல் தரத்தில் கண்டுகளிக்க முடியும். முந்தைய பேசிக் திட்டத்தை போன்றே இந்த சந்தாவிலும் பயனர்கள் ஒரு சமயத்தில் ஒரே சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால், இதில் மொபைல் போன், டேப்லெட்கள், லேப்டாப் மற்றும் டி.வி. போன்ற சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் மற்ற பலன்களை பொருத்தவரை 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
- கிரிக்கெட்டை மையப்படுத்திய ஆவணப்படம் தயாராகியுள்ளது.
- ஆவணப்படத்தில் முன்னாள் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். இந்தியா - பாகிஸ்தான் போட்டியை இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
பல்வேறு காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி ஐ.சி.சி. தொடர்கள் தவிர்த்து மற்ற போட்டிகளில் விளையாடுவதை கடந்த சில ஆண்டுகளை தவிர்த்து வந்துள்ளன. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஆவணப்படம் ஒன்று தயாராகி உள்ளது.
இந்த ஆவணப்படத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டிகளும் சில இடங்களில் காட்சியாக வைக்கப்படுகின்றன.
பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்து இருக்கும் இந்த ஆவணப்படம், "தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி இந்தியா பாகிஸ்தான்" என்ற தலைப்பில் வெளியாகிறது. இதையொட்டி, இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஆவணப்படம் பிப்ரவரி 7-ம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆஸ்கர்ஸ் பரிந்துரை பட்டியலில் லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் இடம்பெற்றுள்ளது.
- இந்தியா சார்பில் ஒற்றை நம்பிக்கையாக உள்ளது.
ஆஸ்கர்ஸ் விருதுகள் 2025-ல் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் பரிந்துரைப் பட்டியலில் இந்தியா சார்பில் "அனுஜா" இடம்பெற்றுள்ளது. இந்த குறும்படத்தின் வெளியீட்டு தேதியை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃப்ளிக்ஸ் தற்போது அறிவித்து இருக்கிறது.
அதன்படி 2025 ஆஸ்கர்ஸ் பரிந்துரை பட்டியலில் உள்ள "அனுஜா" குறும்படம் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் அதன் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், "அனுஜா என்பது விரைந்து மீள்தன்மை, சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையின் கதை. அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லைவ் ஆக்ஷன் குறும்படம் பிப்ரவரி 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வருகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதோடு குறும்படத்தின் டிரெய்லரும் வெளியாகி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.