search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் நேரடி ஆய்வு"

    • தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வடிகாலுடன் கூடிய சிமிண்ட்சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் அறிவுசார்மையம் கட்டுமானப்பணி களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆதிப்புரம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி , பாலாஜி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார்மையம் கட்டுமானப்பணி என மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்அடிப்படையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் படித்து பயன்பெறும் வகையில் அறிவுசார்மையங்கள் கட்டுதல், உள்ளூரிலேயே வணிகம் செய்யும் பொருட்டு விவசாயிகளுக்கு சந்தைகள் அமைத்தல் , சாலைவசதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜாராம், மன்றத்தலைவர்கள் கவியரசு, மிதுன்சக்கர வர்த்தி, செயல்அலுவலர் விஜயலட்சுமி உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மாதிரி பள்ளி செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு செய்தார்.
    • ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசின் மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கல்விகற்றல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட றிந்தார்.

    பள்ளியில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று அவர், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆய்வின்போதுமாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவிலான நுழைவு தேர்வு தயார் செய்யும் விதமாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினத்தன்று மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதில் சிவகங்கை கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் 77 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விடுதி, கட்ட மைப்பு வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எவ்வித போட்டி தேர்வுகளையும், நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ள இந்த பள்ளிகள் தொடங்கப்ப ட்டுள்ளது. திறன்மிக்க ஆசிரியர்களை வைத்து இங்கு பாடங்கள் கற்பிக்க ப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், ஒருங்கி ணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×