என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமையாசிரியர்கள்"

    • பள்ளி வளாகத்தில் உள்ள காலியான இடத்தில் ஊட்டச்சத்து காய்கறித்தோட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
    • பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தற்போது வழங்கியுள்ளார்.

     திருப்பூர்:

    முதல்வரின் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி மாணவர்க ளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாராபுரம் கல்வி மாவட்டத்தில்உள்ள அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தற்போது வழங்கியுள்ளார்.

    அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காலை உணவுத்திட்டங்களுக்கு தலைமையாசிரியர் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் சிறு தானியங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று அதன் மூலம் காலை உணவுத்திட்டம் முறையாக வழங்க வேண்டும்.

    தினந்தோறும் மாணவர்களுக்கு வழங்கும் குடிநீர் காய்ச்சி வழங்கப்படுவதை உறுதி செய்தல் அவசியம். சத்துணவு உண்போர் அன்றாட எண்ணிக்கையினை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளின் பொறுப்பாசிரியர்கள் மூலம் தினமும் காலை 11மணிக்குள் தவறாது எஸ்.எம்.எஸ்., அனுப்பிட வேண்டும்.பள்ளி வளாகத்தில் உள்ள காலியான இடத்தில் ஊட்டச்சத்து காய்கறித்தோட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    ×