என் மலர்
நீங்கள் தேடியது "இரட்டை சதம்"
- வங்காளதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
- இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார்.
சிட்டகாங்:
வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டாகாங்கில் இன்று நடைபெறுகிறது. டாஸ்வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 85 பந்துகளில் சதம் கடந்த அவர், 126 பந்துகளில் இரட்டைச் சதம் என்ற சாதனையை எட்டினார். இதில் 23 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும். இது அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் ஆகும்.
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் இஷான் கிஷன். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
- இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார்.
- உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முநதைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார்.டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார். இதில் 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.
அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.
இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 48 சிக்சர்களை விளாசியுள்ளது. இதன் மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது முந்தைய சாதனை எண்ணிக்கையை இந்திய அணி தாண்டியுள்ளது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை இந்தியா விளாசிய போட்டியாகவும் ராஜ்கோட் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதம் அடித்தார்.
- 2016-க்கு பிறகு முதல் இரட்டை சதம் அடித்த முதல் தெ.ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரிக்கெல்டன் படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்க்ரம் (17), வியான் முல்டர் (5), ஸ்டப்ஸ் (0) ஆகியோர் சொதப்பிய நிலையில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். சதம் விளாசிய பவுமா 106 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரியான் ரிக்கெல்டன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 10-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு இது முதல் சர்வதேச இரட்டை சதம் ஆகும்.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரட்டை சதம் பதிவு செய்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை ரிக்கல்டன் பெற்றார்.
2016-ல் தென் ஆப்பிரிக்காவிற்காக ஹசிம் அம்லா இரட்டை சதம் அடித்தார். அதன்பிறகு தற்போதுதான் தென் ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் இரட்டை சதத்தை எட்டியுள்ளார்.
2016-க்கு பிறகு முன்னாள் கேப்டன்களான டீன் எல்கர் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் இரட்டை சதத்தை பதிவு செய்வதற்கு மிக அருகில் வந்தனர். ஆனால் இருவரும் 199 ரன்களில் அவுட் ஆனார்கள். கடந்த ஆண்டு அக்டோபரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஜி 177 ரன்கள் எடுத்தார்.
மேலும் 266 பந்துகளில் அதிவேக சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் இவர் 4-வது இடத்தைப் பிடித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிவேக டெஸ்ட் இரட்டை சதம் விளாசிய வீரர்கள்:-
211 பந்துகள் - ஹெர்ஷல் கிப்ஸ் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2003
238 பந்துகள் - கிரேம் ஸ்மித் vs வங்கதேசம், சிட்டகாங், 2008
251 பந்துகள் - கேரி கிர்ஸ்டன் vs ஜிம்பாப்வே, ஹராரே, 2001
266 பந்துகள் - ரியான் ரிக்கல்டன் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2025
267 பந்துகள் - ஜாக் காலிஸ் vs இந்தியா, செஞ்சுரியன், 2010