search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை.
    • அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

    மார்ச் மாதத்திற்குள் முதலமைச்சர் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-

    மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
    • அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

    அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • இனி வரும் காலங்களில் பட்டாசு தொழிற்சாலைகளில் பயிற்சிகளும், வெடிமருந்தை கையாளும் போர்மேனுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கப்படும்.
    • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் உரிய நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியானது குறித்து சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், ஜி.கே.மணி, மரகதம் குமரவேல், செல்வப்பெருந் தகை, எஸ்.எஸ்.பாலாஜி, மாரிமுத்து, நாகை மாலி ஆகியோர் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து பேசினார்கள்.

    குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இல்லாமல் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமாக வெடி மருந்துகளை கொண்டு வந்து பட்டாசு தயாரித்துள்ளனர். இதனால்தான் வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

    வருங்காலங்களில் இது போன்ற விபத்தை தடுக்க அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அனுப்பி பணிகளை துரிதப்படுத்தினார். இறந்தவர்கள் குடும்பத்துக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் அரசு சார்பில் நிதி உதவி அளித்திருக்கிறார் என்று குறிப்பிட்டனர்.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் பேசும் போது, அரசு வழங்கியுள்ள நிதி போதாது. இன்னும் அதிகமாக நிதி வழங்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்" என்றார்.

    வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசும்போது, "வெளிநாடுகளில் உள்ளது போல் பட்டாசு ஆலையில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களை அணிந்து பணியாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் அரசு வழங்கியுள்ளது. எங்களது விருதுநகர் மாவட்டத்தில் 1,076 பட்டாசு ஆலைகள் இருந்தாலும் பெரும்பாலான விபத்துக்கள் சிறிய பட்டாசு ஆலைகளில்தான் நடை பெற்று வந்தது. அதற்கு காரணம் லாப நோக்கில் தொழிலை செய்வதால்தான் திடீர் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இதற்காக நாங்கள் தேவையான கருத்தரங்குகளை நடத்தி உரிய பயிற்சியும் கொடுத்து இருக்கிறோம். காப்பீடும் செய்து கொடுக்கிறோம்.

    எனவே இனி வரும் காலங்களில் எந்த மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை இருந்தாலும் அதை ஒழுங்குபடுத்தி தேவையான பயிற்சிகளும் வெடிமருந்தை கையாளும் போர்மேனுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் உரிய நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று அதிகாலை 3 மணியளவில் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு குடும்பத்தினருக்கு தலா ரூ4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன,மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை.

    புயலால் 40 இயந்திர படகுகள்,160 வலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.694 மரங்கள் சாய்ந்துள்ளன. புயலால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. 216 இடங்களில் நிவாரண மையம் அமைக்கப்பட்டிருந்தன. 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×