search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணைக்கொடை"

    • 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களை சார்ந்து ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளனர்.
    • அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்கப்படுகிறது.

    பல்லடம் : 

    தமிழக கோவில் பூசாரிகள் நல சங்க தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்கப்படுகிறது.

    தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களை சார்ந்து ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளனர்.

    வருவாய் குறைந்த அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கும் பொங்கல் கருணைக்கொடை வழங்க வேண்டும். இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் குடும்பங்கள் பயனடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×