என் மலர்
நீங்கள் தேடியது "திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில்"
- வானூர் அருகே திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர்-வக்ரகாளியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தையொட்டி கடலூர், விழுப்புரம், புதுவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரையில் சந்திரமவுலீஸ்வரர் கோவில், வக்ரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது.
பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜையும், அதை தொடர்ந்து கடம் புறப்பாடாகி 10.55 மணிக்கு விமானங்கள், ராஜ கோபுரங்களுக்கும், 11.15 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி கடலூர், விழுப்புரம், புதுவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் உதவி ஆணையர் விஜயராணி, ஆய்வாளர் உமா மகேஸ்வரி, மேலாளர் ரவி, சங்கர் குருக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.