என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்ற நீதிபதி"
- ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் பரிந்துரை.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மே மாதம் 23 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.வி.கங்காபூர்வாலா ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24 இல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
இந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் ஆர். மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதேபோல், ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக குறைந்துள்ளது.
மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் இருவரும் இன்று பதவியேற்க உள்ளதை அடுத்து, இது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பலத்தை 34 ஆக உயர்த்தும்.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 48 மணி நேரத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதியையும் சேர்த்து) 28 ஆக அதிகரித்துள்ளது.
- தீபாங்கர் தத்தா வருகிற 2030-ம் ஆண்டு வரை நீதிபதி பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 11 மணியளவில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த செப்டம்பர் 26ம் தேதி பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்று தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்தது. இந்த தகவலை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதியையும் சேர்த்து) 28 ஆக அதிகரித்துள்ளது.
தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயது ஆகிறது. நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது என்பதால், அவர் வருகிற 2030-ம் ஆண்டு வரை நீதிபதி பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்