என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.முக ஆர்பாட்டம்"
- அ.தி.மு.க. அவை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விழுப்புரம்:
விழுப்புரம் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டி மேடு ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன
போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கல்பட்டு முத்துமைச்செல்வன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராமதாஸ், ராஜா, ஜே. பேரவை துணைச் செயலாளர் பாலாஜி, இணைச் செயலாளர் செங்குட்டுவன், நிர்வாகிகள் வக்கீல் பிரபாகரன், கனல் கண்ணன், பழக்கடை மணிகண்டன், வண்டி மேடு ராஜா ராமன், பன்னீர், கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். இதேபோல் திண்டி வனம், கோட்டக் குப்பம் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. மாநில நிர்வாகி கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.