என் மலர்
நீங்கள் தேடியது "தருமபுரி கலெக்டரிடம் மனு"
- வருடா வருடம் சிறப்பாக வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று விழா எடுத்து வருகின்றனர்.
- ஆக்கிரமிப்பு செய்துள்ள நபரை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுாி மாவடடம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் அருகே உள்ள வீர ஆஞ்சநேயா் கோவில் அறநிலை துறைக்கு சொந்தமானது. மாரண்டஅள்ளி பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வருடா வருடம் சிறப்பாக வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று விழா எடுத்து வருகின்றனர். அதேபோல் இந்த வருடம் வரும் 23-ம் தேதி மாரண்டஅள்ளி பொதுமக்கள் அனுமன் ஜெயந்தி விழா எடுக்க ஆயத்தமாகி உள்ளனர்.
இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான முன் பகுதியில் தனி நபர் ஒருவர் அத்துமீறி இடத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார். இதனால் விழா காலங்களில் ஆஞ்சநேயருக்கு விழா எடுப்பதற்கு போதிய இடம் இல்லாமல் பக்தர்கள் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுவதால் ஆக்கிரமிப்பு நிலங்களையும் அகற்றி கோவில் பொது சொத்தை மீட்டு தர வேண்டும் என பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தருமபுரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் மீது ஆய்வு செய்த கலெக்டர் வீர ஆஞ்சநேயர் கோவில் முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்து ஆணை கடிதம் வழங்கியும் இதுவரை அதிகாரிகள் மெத்தன போக்குடன் இருந்து வருகின்றனர். அதனால் கலெக்டர் மாரண்டஅள்ளி பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோயிலுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபரை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு மாரண்டஅள்ளி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.