என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிரியார் ஸ்டேன் சுவாமி"

    • பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
    • பாஸ்டனை தளமாகக் கொண்ட தடயவியல் அமைப்பான அர்செனல் கன்சல்டிங் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பயங்கரவாத தொடர்பு குற்றச்சாட்டில் 2020ல் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி (83), ஜாமீன் மனு விசாரணையில் இருக்கும்போதே 2021ம் ஆண்டு மரணம் அடைந்தார். ஸ்டேன் சுவாமி திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்த நிலையில்தான் இவரை பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்து சிறையில் அடைத்தது.

    பீமா கோரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 15 பேருடன் சேர்ந்து அவர் சதியில் ஈடுபட்டதாக என்ஐஏ கூறியது. அவர்களின் கணினிகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து சதி செய்ததாக சுவாமி மற்றும் மற்றவர்கள் குறிப்பாக இடதுசாரி ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள மீது என்ஐஏ குற்றம் சாட்டியது.

    இந்நிலையில் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் பல குற்றவியல் ஆவணங்கள் திணிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தடயவியல் நிறுவனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேன் சுவாமியின் வழக்கறிஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, தடயவியல் அமைப்பான அர்செனல் கன்சல்டிங், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    மாவோயிஸ்ட் கடிதங்கள் என அழைக்கப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள், 2014ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவரை, 5 ஆண்டுகளாக ஸ்டேன் சுவாமியின் கணினியை அணுகிய ஹேக்கர்களால் திணிக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது என்ஐஏவின் குற்றச்சாட்டில் கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    ×