என் மலர்
நீங்கள் தேடியது "புதுமைப்பெண் திட்டத்தில் ஆதார் எண் இணைப்பு"
- புதுமைப்பெண் திட்டத்தில் ஆதார் எண் இணைப்பு குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- இத்திட்டத்தின்கீழ் 2-ம் கட்டமாக 805 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு, கைபேசி எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது குறித்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,
தமிழக அரசு பெண் கல்வியை ஊக்கப்படுத்திடும் பொருட்டு, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 14 அரசு கல்லூரிகள், 25 தனியார் கல்லூரிகளில் பயிலும் 990 மாணவியர்களுக்கு முதற்கட்டமாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தின்கீழ் 2-ம் கட்டமாக 805 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கல்லூரி வாரியாக உரிய படிவத்தில் மாணவிகளின் விவரங்களை பெற்று மின் மாவட்ட மேலாளர் மூலம் தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் நிறுவன தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து தீர்வு காணவும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மாணவிகளின் விவரங்களை பெற்று வங்கிகள் மூலம் தீர்வு காணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.