என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி கூட்டுறவு ஆலை"

    • போராட்டத்தில் ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.

     உடுமலை:

    உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியுள்ளது. போராட்டத்தில் ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:-

    எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 25 மாத பி.எப்., தொகையை ஆலை நிர்வாகத்தினர் செலுத்தாமல் உள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பி.எப்., மற்றும் குடும்ப பென்ஷன் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 4 மாத ஊதியம் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள உள்ள 3 ஆண்டு ஈ.எல்., தொகையை வழங்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வோம் என்றனர். 

    ×