என் மலர்
நீங்கள் தேடியது "மாநில கலைத்திருவிழா போட்டி"
- மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர், குழுவினர் விபரங்களை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- கும்மிநடனம், நடனம் (செவ்வியல்) ஆகிய நான்கிலும் முதலிடம் பெற்று 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அசத்தியுள்ளது.
திருப்பூர்:
மாநில அளவிலான கலைத்திருவிழாவுக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 120 தனிநபர், 390 குழு நபர்கள் என மொத்தம் 510 பேர் தேர்வாகினர். அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட அளவிலான தனிநபர், குழு போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர், குழுவினர் விபரங்களை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தனிநபர் பிரிவில் 120 பேரும், குழுபிரிவில் 390 பேரும் தேர்வாகியுள்ளனர்.
தனிநபர் போட்டிகள்
செவ்வியல் இசை - அனுமிதா (ஜெய்வாபாய் பள்ளி ), நாட்டுப்புற பாடல் - மீனா (குன்னத்தூர்) மெல்லிசை தனிப்பாட்டு - யோகேஸ்வரி (சோமன் கோட்டை - மூலனூர்), வாத்திய கருவிகள், கம்பிகருவி - நிரஞ்சன் (நெசவாளர் காலனி), காற்றுக்கருவி, தோல்கருவி இரண்டிலும் தபாஸ்ரீதரன் (கொழிஞ்சிவாடி, தாராபுரம்). அழகு கையெழுத்து தமிழ் - கார்த்திகா (எருகாம்பட்டி, குண்டடம்), ஆங்கிலம், -லிக்கித் கோகுல் (ப.வடுகபாளையம்), ஓவியம் - ஸ்ருதி (பாண்டியன் நகர்), களிமண் சுதை வேலைப்பாடு - வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொங்கலுார்.
செதுக்கு சிற்பம் - இந்திரேஷ்குமார் (கணபதிபாளையம், வெள்ளகோவில்), மனதில் பதிந்த இயற்கை காட்சி வரைதல் - சர்வேஷ் (கானூர்புதூர்), வரைந்து வண்ணம் தீட்டுதல் - லோகேஸ்வரி (ஆண்டிபாளையம்), செவ்வியல் நடனம் தனிநபர் - தாரணி (பூலுவப்பட்டி), பிறவகை நடனம், ராகுல் (அலங்கியம்), மேற்கத்திய நடனம், ஜீவாஸ்ரீ (குன்னத்தூர்). தனிநபர் நடிப்பு - விஸ்வா, (செம்பாகவுண்டம்பாளையம், அவிநாசி). நகைச்சுவை - பிரதீப் (முத்துார்), பலகுரல் பேச்சு - தேவராஜ் (முத்தூர்), கட்டுரை போட்டி ஆங்கிலம் - ரம்யா (முத்தூர்), தமிழ் - தனுஸ்ரீ (சிறுபூலுவப்பட்டி), கதை எழுதுதல் தமிழ் - மதுஸ்ரீ (வீரணாம்பாளையம், காங்கயம்). ஆங்கிலம் - மதுமிதா (15 வேலம்பாளையம்).
கதை சொல்லுதல் - பரத், (லிங்கமநாயக்கன் பாளையம், குடிமங்கலம்), கவிதை - தனுஷியா (எஸ்.எஸ்., புதூர், உடுமலை), திருக்குறள் ஒப்புவித்தல் - அனுஸ்ரீ (நரசிங்கபுரம், தாராபுரம்), பேச்சு போட்டி ஆங்கிலம் - சாருநேத்ரா (பழனியம்மாள் பள்ளி, திருப்பூர்), தமிழ் - காத்தவராயன் (முத்தூர்).
குழு போட்டிகள்
இசை வில்லுப்பாட்டு: கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கிராமிய நடனம்: அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குழு நடனம்: அரசு மேல்நிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் (அவிநாசி). பிறவகை நடனம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திம்மநாயக்கன்பாளையம் (ஊத்துக்குளி), மேற்கத்திய நடனம்: பழையகோட்டைபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (காங்கயம்), நாடகம்: அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. மொழித்திறன் போட்டி: இசை (மனித நேய பாடல் பிரிவு), கும்மிநடனம், நடனம் (செவ்வியல்) ஆகிய நான்கிலும் முதலிடம் பெற்று 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அசத்தியுள்ளது.