search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லியோனல் மெஸ்ஸி"

    • மெஸ்சியை நிழல் போல பின் தொடரும் அவரது பாதுகாவலரின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
    • வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் பொது இடங்களில் செல்லும் போது ரசிகர்கள் அவரை நெருங்க முயற்சிப்பது வழக்கம். சில நேரங்களில் ரசிகர்களுடன் மெஸ்ஸி புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் அதில் சில ரசிகர்கள் அத்துமீறி அவர் மீது கைவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே இதை தடுப்பதற்காக மெஸ்சியின் பாதுகாவலர்கள் அவருடன் எப்போதும் செல்வார்கள்.

    இந்நிலையில் மெஸ்சியை நிழல் போல பின் தொடரும் அவரது பாதுகாவலரின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அவரது பெயர் யாசின் சூகோ. இவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடற்படை வீரராக அமெரிக்க ராணுவத்திற்காக பணியாற்றியவர். இவரை பற்றிய வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒருவர், நீங்கள் உலகின் புகழ் பெற்ற நபராக இருந்தால்... நிச்சயம் உங்களை பிடிக்காத சிலரும் இருப்பார்கள். எனவே அனைவரும் உங்களை தொட அனுமதிப்பது மிகப்பெரிய ஆபத்தை தரும். எனவே மெஸ்ஸி தன்னை பாதுகாக்க இதுபோன்ற நபரை தேர்வு செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

    • BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர்.
    • மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர்.

    ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டி நேற்று (மே 26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. கடுமையாகப் போராடி பைனல்ஸ் வரை வந்த ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்றைய போட்டியில் வெற்றிக் கோப்பைக்கான வேட்டையில் ஆக்ரோஷமாக விளையாடின.

     

    அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வெனறு பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 18.3 ஓவரில் 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3 வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது.

     

    வெற்றிக்குப் பிறகு, BCCI தலைவர் ரோஜர் பின்னி மற்றும் வாரியச் செயலர் ஜெய் ஷா வெற்றிக் கோப்பையை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் வழங்கினர். கோப்பையை பெற்ற ஸ்ரேயாஸ் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றபோது செய்ததைப் போல பாவனை செய்து தனது அணியுடன் கோப்பையை உயர்த்திக்காட்டினார்.

    கடந்த 2022 டிசம்பரில் கத்தாரில் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான அசுர வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி வெற்றிக்களிப்பில் நடந்து வந்த தருணத்தை ஐபில் கோப்பையை பெற்றுக்கொண்ட ஸ்ரேயாஸ் மீண்டும் உருவாக்கியது அனைவரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. மெஸ்ஸியின் வீடியோவையும், ஸ்ரேயாஸின் வீடியோவையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் ஃபயர் விட்டு வருகின்றனர். 

    • பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்றே மெஸ்ஸி கூறியுள்ளார்.
    • பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    பிரான்சின் பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்காத நிலையில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.

    ஊதியம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே முரண்பாடு நீடிப்பதால், பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் இணைந்த பின்னர் மொத்தம் 28 ஆட்டங்களில் 17 கோல்கள் விளாசியுள்ள மெஸ்ஸி, 16 கோல் வாய்ப்புகளை உருவாக்கி சக வீரர்களுக்கு உதவியுள்ளார்.

    தமது கால்பந்து வாழ்க்கையை சமீப மாதங்களாக கொண்டாடிவரும் மெஸ்ஸி, 2022 ஆம் ஆண்டின் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையையும் கைப்பற்றினார். கத்தார் உலகக் கோப்பைக்கு முன்னர் பிஎஸ்ஜி அணியுடன் ஓராண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்திருந்தார் மெஸ்ஸி.

    ஆனால் பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்று மெஸ்ஸி கூறியுள்ளார். பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    தற்போது அவர் ஆண்டுக்கு 34.84 மில்லியன் பவுண்டுகள் ஊதியமாக பெற்று வருகிறார். மேலும், புதிய ஒப்பந்தம் தொடர்பில் பிஎஸ்ஜி அணி முன்வைத்த நிபந்தனைகளும் மெஸ்ஸியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    இதனிடையே, மெஸ்ஸியின் தந்தை பார்சிலோனா அணியுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் தான் மெஸ்ஸியின் எதிர்காலம் தொடர்பில் ரசிகர்களிடையே கவலை எழுந்துள்ளது.

    • உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,
    • 35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார். அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

    உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.

    35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×