என் மலர்
நீங்கள் தேடியது "ரவி மரியா"
- அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்களை இயக்கிய திருமலை தற்போது மான் வேட்டை படத்தை இயக்கியுள்ளார்.
- மான் வேட்டை இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மான் வேட்டை. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தை டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, "இயக்குனர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்" என்றார்.

மான் வேட்டை
நடிகர் ரவி மரியா பேசியதாவது, "நண்பர் திருமலைக்காக மட்டுமே இந்த விழாவிற்காக வந்தேன். இந்த படம் வெற்றி பட வரிசையில் இணைய வேண்டும். திருமலை எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க கூடிய நல்ல மனிதர். நல்ல படம் எப்பொழுதும் வெற்றி பெறும். சிறந்த படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். அந்த வரிசையில் இந்த மான்வேட்டை படம் மிகப்பெரிய வெற்றியடையும்" என்றார்.
- தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் ரவி மரியா.
- இவர் ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த 'ஆசை ஆசையாய்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. தொடர்ந்து இவர் 'மிளகா' படத்தை இயக்கினார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்த 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.மேலும், இவர் காமெடி வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

ரவி மரியா
இந்நிலையில் நடிகர் ரவி மரியா தன் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, "எனது இன்ஸ்டாகிராம் ஐடி போன்று போலியாக ஐடி உருவாக்கி மர்ம நபர் ஒருவர் நான் பணம் கேட்பது போன்று பல நண்பர்களிடம் பணம் கேட்டுள்ளார். அதை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதற்காக காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். தயவு செய்து என்னுடைய போலி கணக்கை பயன்படுத்தி யாராவது பணம் கேட்டால் தயவு செய்து கொடுக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.
- திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது.
- நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிசியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யோகிபாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர்கள் யோகி பாபு, ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.