என் மலர்
நீங்கள் தேடியது "வேன் பைக் திருட்டு"
- வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் மற்றும் ஆம்னி வேன் திருடுபோனது
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே குச்சனூரை சேர்ந்தவர் பக்கீம்ராஜா(42). இறைச்சிகடை நடத்தி வருகிறார். கேரள மாநிலம் முருக்கடியை சேர்ந்த கதிரேசன் என்பவரிடம் ஆம்னிவேன் வாங்கி வந்தார்.
அந்த வண்டியை குச்சனூரில் உள்ள தனது வீட்டுமுன்பு நிறுத்திவிட்டு தூங்க ச்சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வேனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சின்ன மனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வேனை திருடி ச்சென்ற மர்மநப ர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(42). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின்முன்பு நிறுத்திவிட்டு தூங்கச்செ ன்றார். காலையில் எழுந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்ைல. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.