search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான்- இங்கிலாந்து தொடர்"

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • ஹாரி புரூக் முச்சதமும், ஜோ ரூட் இரட்டை சதமும் அடித்து அசத்தினர்.

    முல்தான்:

    பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நான்காம் நாளில் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

    இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணி 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    7வது விக்கெட்டுக்கு ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஜோடி தாக்குப் பிடித்து ஆடியது.

    நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. ஆகா ஜமான் 41 ரன்னும், ஆமீர் ஜமால் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி இன்னும் 115 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் இங்கிலாந்து அணி மீதமுள்ள 4 விக்கெட்களைக் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
    • ராவல்பிண்டி, முல்தான் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

    பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் ராவல்பிண்டி, முல்தானில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நாளை கராச்சியில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்-வாஷ் செய்ய இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது.

    நாளை தொடங்கும் கராச்சி டெஸ்டில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரேகன் அகமது களம் இறங்குவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 வயது ஆகும் இவருக்கு கராச்சி டெஸ்ட் அறிமுக போட்டியாகும். இதன்மூலம் மிக இளம் வயதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் 1949-ல் டி.பி. க்ளோஸ் 18 வயது 149 நாட்கள் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகியுள்ளார்.

    ரேகன் அகமதுவுக்கு 18 வயது 126 நாட்கள் ஆகிறது.

    ×