என் மலர்
நீங்கள் தேடியது "பா.ஜ.க ஆர்ப்பாட்டம்"
- பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ஊட்டி,
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரை கண்டித்து நீலகிரி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க இளைஞரணி தலைவர் பிரேம் யோகன் தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன், நகரத் தலைவர் திரு பிரவீன் ,நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகரத் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்