என் மலர்
நீங்கள் தேடியது "உபி விபத்து"
- வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிலிபிட்:
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம் (28) என்பவர் தனது மனைவி ஈஸ்வரி தேவி, மகள்கள் நந்தினி(5), ரூபி (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பிலிபிட்-பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.
மேலும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இன்று அதிகாலையில் டபுள் டக்கர் பேருந்து ஒன்று பால் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து, பால் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, விபத்தில் 18 பேர் இறந்திருக்கலாம் என்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
- அடர்பனி, தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- இந்த விபத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
ஜார்க்கண்டில் நேற்று மாலை திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மற்றும் அவர்களது உறவினர்கள் இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள தம்பூர் பகுதியில் இருக்கும் மணமகனின் வீட்டுக்கு வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலை 74-ல் வந்தபோது எதிரே வந்த டெம்போ மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 2 வாகனங்களும் அருகில் இருந்த பள்ளம் ஒன்றில் கவிழ்ந்தன. மணமக்கள் வந்த வாகனத்தில் 11 பேர் இருந்தனர். அவர்களில் மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் உள்பட உறவினர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வேன் டிரைவர் உயிரிழந்தார்.
அடர்பனி, தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.
- பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
- லாரியில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே இன்று அதிகாலை கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி போபுரா சௌக் அருகே வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் சத்தம் 3 கி.மீ தூரத்திற்கு கேட்கிறது. உயிரிழப்பு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சத்தத்தை கேட்டு பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
லாரியில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு படையினரால் சம்பவ இடத்தை நெருங்க முடியவில்லை. இதன்பின் சம்பவ இடத்தை நெருங்கிய தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.