என் மலர்
நீங்கள் தேடியது "வாயுக் கசிவு"
- குடிநீர் உந்து நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் வாயுக் கசிவு சீரமைக்கப்பட்டது.
- பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
கரூர்:
கரூர் மாவட்டம் மூலக்காட்டானுார் மாநகராட்சி குடிநீர் உந்து நிலையத்தில், குடிநீர் கலப்பதற்காக குளோரின் வாயுப் பகுதி உள்ளது. இந்த வாயுப் பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள பகுதியில் இருந்தவர்களுக்கு லேசான கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை நிலைய உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 11 தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து வாயுக் கசிவை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பாலக்காட்டில் இருந்து தொழில்நுட்ப பணியாளர்கள் 2 மணிநேரம் பணியில் ஈடுபட்டு, குளோரின் வாயுக் கசிவைத் தடுத்து நிறுத்தி நிலைமையை சீர் செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.