என் மலர்
நீங்கள் தேடியது "சுகாதார விழிப்புணர்வு"
- தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்தடுப்பூசி போடப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி நாசுவம்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார்.
கால்நடை பராமரிப்புத் துறை திருப்பூர் கோட்ட உதவி இயக்குநர் (பொறுப்பு)டாக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.இந்த முகாமில் 92 கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்தடுப்பூசி,20 நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி,191கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசியும் போடப்பட்டது.
மேலும் 26 கால்நடைகளுக்கு மருத்துவ உதவி,5 ஆடுகளுக்கு ஆண்மை நீக்கம், 10 செயற்கை முறை கருவூட்டல்,15 கருவுற்றல் ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.இதில் கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி போலீஸ் குடியிருப்பில் திடக்கழிவு மற்றும் மக்கும் கழிவு மக்காத கழிவு ஆகிய குப்பைகளை தரம் பிரித்து வழங்க ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் (பொறுப்பு) செயல் அலுவலர் சண்முகம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள், வார்டு கவுன்சிலர் சின்னன், மஸ்தூர் யூனியன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.