என் மலர்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி போலீசார்"
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன் போலீசில் புகார் செய்தார்.
- தூத்துக்குடி வடபாகம் போலீசார் முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா மீது கொலை மிரட்டல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இதில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பேசினார்.
அப்போது அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டும் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா மீது கொலை மிரட்டல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.