search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கு நடிகர்"

    • சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏ.டி. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது
    • பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராஜா சாப் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து இவரது நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து வருகிறது.

    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏ.டி. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்தது.

    இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் 5 புதிய படங்கள் உருவாகி வருகிறது.

    ராஜா சாப்:- பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராஜா சாப் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

    ஸ்பிரிட்:- சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஸ்பிரிட் படம் ரூ.350 கோடியில் உருவாகிறது.

    கல்கி 2898 ஏ.டி. 2-ம் பாகம்:- நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள கல்கி 2898 ஏ.டி. படத்தின் பட்ஜெட் ரூ.700 கோடி ஆகும்.

    சலார்-2:- நீல் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள சலார்-2 படம் ரூ.350 கோடியில் உருவாகிறது.

    மேலும் ஹனு ராகவாடி இயக்கத்தில் பெயரிடப்படாமல் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ரூ.300 கோடியில் தயாராகிறது. அதிக பொருட் செலவில் பிரபாசின் நடிப்பில் வெளியாக இருக்கும் 5 படங்களின் மொத்த பட்ஜெட் ரூ.2100 கோடி என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
    • கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான 'சிப்பாயி கூத்துரு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த அனைத்து வேடங்களையும் சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இதுவரை 770க்கும் மேற்பட்ட படங்களில் சத்யநாராயணா நடித்துள்ளார். கடைசியாக மகேஷ் பாபுவின் 'மஹார்ஷி' படத்தில் நடித்திருந்தார்.

    தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இந்தப் படத்தில் கைகலா சத்யநாராயணா பேசிய 'சின்ன கல்லு, பெத்த லாபம்' என்ற வசனம் யாராலும் மறக்க முடியாது. மேலும் 'பெரியார்' படத்தில் பெரியார் அப்பா வெங்கடப்ப நாயக்கராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

    கடந்த 1996 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிபட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினார். இவர் தனது ராமா பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஏராளமான படங்களை தயாரித்து உள்ளார்.

    கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கைகலா சத்யநாராயணா மறைவு வேதனை அளிக்கிறது. தனது குறிப்பிடத்தக்க நடிப்பு திறன் மற்றும் மாறுபட்ட பாத்திரங்களுக்காக தலைமுறைகள் கடந்து பிரபலமானவர் சத்யநாராயணா. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

    ×