என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் கிரிவலப்பாதை"

    • மாதப்பூர் முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும்.
    • தேர்த்திருவிழாவின் போது பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் அமைந்துள்ளது முத்துக்குமாரசாமி மலை கோவில். இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த கோவிலில் மூலவராக முத்துக்குமாரசாமி சன்னதியும் மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை, பாலகணபதி, நவகிரகம் போன்ற சன்னதிகள் அமைந்துள்ளன.மாதப்பூர் முத்துக்குமாரசாமி சிலையும், பழநி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும்.

    எனவே பழனி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்குச் சென்று முருகனை தரிசிப்பது வழக்கம் .இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், போன்ற விழாக்களின் போது தேர் கிரிவலம் வருவது வழக்கம், இங்குள்ள கிரிவல சாலை ஆனது சுமார் 500 மீட்டர் தூரம் கொண்டது. இதற்கு தார்சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேர்த்திருவிழாவின் போது பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள். இந்த நிலையில் தேர் கிரிவல சாலை மண் சாலையாக இருப்பதால் பக்தர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே தமிழக அரசு முத்துக்குமாரசாமி மலைக்கோவிலுக்கு தார்சாலை அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×