search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்ப பக்தர்"

    • விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு சென்ற 11 பக்தர்கள் வந்த கார் குமுளி அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சபரிமலை வந்த ஐயப்ப பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அவர் விபத்தில் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வந்த தமிழக பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து மனம் வருந்தினேன். உறவினர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுபோல கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    ×