என் மலர்
நீங்கள் தேடியது "முககசவம்"
- பி.எப்., 7 உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
- முன்னெச்சரிக்கையுடன் செயல்பட தேவையான பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக அரசும் துவக்கியுள்ளது.
திருப்பூர் :
வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என பின்னலாடை நகரான திருப்பூரில் ஏராளமானோர் வசிக்கின்றனர். வெளிநாட்டினரும் அடிக்கடி வரும் நகரம்.தொழில் நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு பலர் பயணமாகி விட்டு திரும்ப வருவது வழக்கமாக உள்ளது. கடந்த கொரோனா அலைகளின் போது வேகமாக பரவும் மாவட்டங்கள் பட்டியலில் திருப்பூர் இடம் பெற்றிருந்தது.அதற்கு முக்கிய காரணம் இங்குள்ள மக்கள் தொகை. மாவட்டத்தில் 26 லட்சம் மக்களும், மாநகரில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரும் வசிக்கின்றனர்.
மக்கள் நெருக்கடியும், நெரிசலும் தவிர்க்க முடியாததாக உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் பி.எப்., 7 உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட தேவையான பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக அரசும் துவக்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதிகளில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
திருப்பூர் கொரோனாவையும் வென்று காட்ட வேண்டுமெனில் நாம் அனைவரும் இப்போதிருந்தே முக கவசம் அணியும் பழக்கத்தை மீண்டும் துவங்க வேண்டும். ஒவ்வொருவர் பாதுகாப்பையும் அவரவர் உறுதி செய்து கொள்ள முககவசம் அணிந்து விட்டால் வரும் நாட்களில் பயமின்றி வாழலாம். தற்போதைய நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை. கண்காணிப்பில் இருப்பவர்களுக்கும் இல்லை என மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.