search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்இந்தியா விமானம்"

    • விஸ்தாராவை ஏர்இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு இதில் 25.1 சதவீதம் பங்கு உள்ளது.
    • நேற்றுடன் விஸ்தாரா விமான சேவைகள், ஏர்இந்தியா விமான சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

    விஸ்தாரா விமான நிறுவனம் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைவதற்கான வேலைகளை நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர்இந்தியா விமானங்களாக சென்றன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஸ்டாஃப்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

    ஏர்இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைந்த பின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு புறப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.

    நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டது. இது உள்நாட்டிற்கான முதல் விமானம் ஆகும்.

    விஸ்தாரா ஏர்இந்தியாவுடன் இணைந்த நிலையில், சிங்கப்பூர ஏர்லைன்ஸ் இதில் 25.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் முப்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    அதன்படி, மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானம் லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • அனைத்து பயணிகளும் விமான நிலையத்திலும், பயணத்தின் போதும் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    • அனைத்து நுழைவு பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    சீனாவில் ஒமைக்ரானின் புதிய திரிபான பி.எப்.7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஆங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

    அனைத்து பயணிகளும் விமான நிலையத்திலும், பயணத்தின் போதும் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து நுழைவு பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும். அதே நேரத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரேண்டம் பரிசோதனை தேவையில்லை என்றும் அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×