என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறனறி தேர்வு"

    • திறனறி தேர்வுக்கு 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிகல்வி துறை தெரிவித்துள்ளது.
    • தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் 25ந்தேதி தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜனவரி) 20ந்தேதிக்குள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு கட்டண தொகை ரூ.50ஐ தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அடுத்த மாதம் 24ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், பள்ளிகள் திறந்தவுடன் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • மத்திய கல்வி அமைச்சகத்தால், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
    • தேர்வு நடத்தி விபரங்களை சேகரிக்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்: 

    3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக, எஸ்இஏஎஸ் எனும் திறனறிவு தேர்வு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை (3ந் தேதி) நடத்தப்படுகிறது.

    மத்திய கல்வி அமைச்சகத்தால், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த, 2022ல் தேர்வு நடந்த நிலையில், நடப்பாண்டுக்கான (2023) தேர்வு 3, 5, 8மற்றும்9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (3ந் தேதி) நடத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடத்தி விபரங்களை சேகரிக்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ×