என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அனில் தேஷ்முக்"
- தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற வன்முறை இதற்கு முன்னதாக ஒருபோதும் நடந்தது இல்லை.
- மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை மந்திரியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் மீது நேற்றிரவு கடோல்-ஜலால்கேடா சாலையில் காரில் சென்றபோது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞசய் ராவத் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற வன்முறை இதற்கு முன்னதாக ஒருபோதும் நடந்தது இல்லை. தேவேந்திர பட்நாவிஸ் தற்போது உள்துறை மந்திரியாக உள்ளார்.
அவருடைய நகரில் முன்னாள் உள்துறை மந்திரியை கொல்ல சதி நடைபெற்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இதற்கு முதலில் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும். மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இந்த 2 வருடத்தில் மகாராஷ்டிராவின் சட்ட ஒழுங்கை தேவேந்திர பட்நாவிஸ் கெடுத்துவிட்டார். மும்பை தெருக்களில் பாபா சித்திக் போன்றோர் கொல்லப்பட்டதுபோல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்த அடிப்படையில் முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தாக்கப்பட்டு, கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இதற்கு பட்நாவிஸ், அவரே முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
- பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சரும், என்.சி.பி (எஸ்.பி.) தலைவருமான அனில் தேஷ்முக் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாக்பூர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது காரின் மீது கற்கள் வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேஷ்முக் கட்டோல் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் பெல்பாட்டா அருகே தேஷ்முக்கின் கார் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசினர். தாக்குதலின் போது காயம் அடைந்த தேஷ்முக் உடனடியாக கடோல் சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
"இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியது. தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர்," என்று காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதா கூறினார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இன்று பிரச்சாரம் நிறைவு பெற்றது. தற்போது தாக்குதலுக்கு ஆளான தேஷ்முக்கின் மகன் சலில் தேஷ்முக், கடோல் சட்டமன்றத் தொகுதியில் என்சிபி (சரத்சந்திர பவார்) சார்பில் பாஜகவின் சரண்சிங் தாக்கூரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை மந்திரியான அனில் தேஷ்முக் 2019-ம் ஆண்டில் பொறுப்பேற்றார். அப்போது மது பார்களில் இருந்து மாதந்தோறும் பணம் வசூலித்து தரும்படி அனில் தேஷ்முக் கூறியதாக, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அப்போதைய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதினார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பண மோசடி வழக்கு பதிவுசெய்த அமலாக்கத் துறையினர், மந்திரி அனில் தேஷ்முக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஜாமீன் வழங்க கோரி மும்பை ஐகோர்ட்டில் கடந்த டிச.12-ல் அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பு எதிர்ப்பு தெரிவித்து. எனினும் சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மும்பை ஆர்தர் ரோடு சிறையிலிருந்து அனில் தேஷ்முக் இன்று மாலை வெளியே வந்தார். தேசியவாத காங்கிரஸ்
கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்