என் மலர்
நீங்கள் தேடியது "முக ஸ்வாலின்"
- ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனாட்சி என்ற 60 வயது பெண்மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
- பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இயன்முறை சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் துரையையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆகஸ்டு 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் தொடங்கி வைத்தார்.
பயனாளியின் வீடு தேடி சென்று அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை தரும் இந்த திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்துக்கு முன்னோடி திட்டமாக விளங்கி வருகிறது.
இந்தத் திட்டத்தினை முதலமைச்சர் சாமண பள்ளியில் தொடங்கி வைத்தபோது ஒரு கோடியாவது பயனாளியை விரைவில் கண்டறியும் வகையில் திட்டத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
தற்போது இந்த திட்டம் ஓராண்டில் ஒரு கோடியாவது பயனாளியை திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியில் கண்டறியும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
அதன் பின்னர் 50 லட்சமாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்தலப்பாக்கம் ஊராட்சியில் ஒரு பெண்ணுக்கு நேரில் வழங்கினார். அதன் பின்னர் 60 லட்சமாவது பயனாளிக்கு மதுரையிலும், 75 லட்சமாவது பயனாளி நாமக்கல் மாவட்டம் போதமலையில் உள்ள மலைவாழ் பெண் நல்லம்மாளுக்கும் தரப்பட்டது.
அதன் பின்னர் 80 லட்சமாவது பயனாளி சென்னையில் கோதாமேடு பகுதியிலும் 90 லட்சமாவது பயனாளி விருகம்பாக்கத்திலும் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சி அருகே உள்ள சன்னாசிப்பட்டி ஊராட்சி மேல தெருவில் வசிக்கும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனாட்சி என்ற 60 வயது பெண்மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இயன்முறை சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் துரையையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது.
- வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீதே எங்களது எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில் கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. தேவையான எந்த உதவிகளையும் வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றாக இணைந்து வென்று வருவோம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில், "உங்கள் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்காக நன்றி தோழர் பினராயி விஜயன்.
தமிழக மக்கள் கேரளத்தின் ஆதரவையும், உதவி செய்ய முன்வந்ததையும் பெரிதும் மதிக்கிறார்கள். நாம் ஒன்றாக மீண்டும் கட்டியெழுப்புவோம், வலுவாக வெளிப்படுவோம்" என்றார்.