என் மலர்
நீங்கள் தேடியது "காதலர்கள்"
- சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- ஸ்ரீ ரங்கனாயக்க சுவாமி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வந்தது.
சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
நேற்று அவர்கள் இருவரும் தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கனாயக்க சுவாமி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஹீராமந்தி வெப் சீரிசில் அதிதி ராவ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் வெளியீடும் தேதி அறிவிக்கப்படும் விழாவில் அதிதி ராவ் கலந்துக் கொள்ளவில்லை. அவர் திருமணம் நடப்பதால் அவரால் வர இயலவில்லை என கூறினர், அதனால் தகவல்கள் காட்டு தீப் போல் பரவியது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு தற்பொழுது திருமணம் நடக்கவில்லை, நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது என பதிவை பதிவிட்டுள்ளனர். அதில் " ஹீ செட் எஸ் - எங்கேஞ்டு" என்ற தலைப்பில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி தங்கம் வென்றது
- தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கேத்தரினா மற்றும் மச்சாக் ஜோடி 6-2, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் சீனாவில் வாங் சின்யு மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை தோற்கடித்து தங்கம் வென்றனர்.
தங்கம் வென்றதும் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
2021 ஆம் ஆண்டு முதல் கேத்தரினாவும் மச்சாக்கும் காதலித்து வந்தனர். பாரிஸ் ஒலிம்பிக் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு அவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். பிரேக் அப் செய்திருந்தபோதும் நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட இருவரும் சம்மதித்தனர்.
பிரேக் அப் செய்து கொண்ட காதல் ஜோடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்று முத்தமிட்டுக் கொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
தங்கம் வென்ற பின்பு பேசிய கேத்தரினா, " நீங்கள் குழப்பம் அடைவதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை" என்று சிரித்தபடியே தெரிவித்தார்.
இதனையடுத்து தங்களின் உறவு குறித்து பேசிய மச்சாக், "டாப் சீக்ரெட்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- போலித்தனங்களின் கொடுங்கரங்களுக்குப் புலப்படாத மாயத்தன்மை காதலுக்கும் அன்புக்கும் மட்டுமே உண்டு.
- காதலின் நகரமான பாரீஸ் வீதிகள் கலையம்சம் கொண்டு மிளிர்கிறது.
உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. காதல் என்பது இனம், மதம், நாடு, மொழி என்ற வரையறைகளுக்குள் சிக்காமல் உலகமெங்கும் பரவி நிற்கும் ஒன்று. ஐந்தறிவு மிருகங்கள் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை காதல் என்பது வாழ்வை அர்த்தமாகும் உணர்வு. அந்த உணர்வு ஒவ்வொருவரிடத்திலும் அவர்களின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் தோன்றியிருக்கவே செய்யும்.
அது பள்ளி பருவமாக இருந்தாலும், தள்ளாடும் வயோதிகமாக இருந்தாலும் காதல் துளிர்க்கும் தருணங்கள் வாழ்வின் முழுமையை உணர வைக்கும் வல்லமை கொண்டவை. காதலை வெறுமனே உடலின் பாற்பட்ட ஈர்ப்பு என்று கருதுபவர்கள் பரிதாபத்திற்குரியர்கள். காதலின் உண்மை சாராம்சம் அறியாதவர்கள்.
சமூகம் என்ற கட்டமைப்பு காதலுக்கு எதிராக எத்தனை கற்பிதங்களை உருவாக்கினாலும், தனிமனித உள்ளங்களுக்குள் சுடர்விடும் பொறியை, உயிர்வாழ்தலின் உண்மைப் பொருளை சமூகத்தால் மூடி வைக்க முடியாது.
காதலால் நிரம்பிய உலகம் வஞ்சகம் அற்ற வன்முறை அற்ற அன்பின்பாற்பட்டதாக இருக்கும். ஒருவரை ஒருவர் சுரண்டவும் ஏமாற்றவும் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்துள்ள வர்க்கங்கள் முதலான போலி படாடோபங்களை சுக்குநூறாக உடைத்து அன்பை உலக நெறியாக போதிக்கும் வல்லமை வேறெதையும் விட காதலுக்கு மட்டுமே உண்டு.
வேறெதையும் விட மனிதனை இயக்கும் சக்தி, மேற்கூரிய போலித்தனங்களின் கொடுங்கரங்களுக்குப் புலப்படாத மாயத்தன்மை காதலுக்கும் அன்புக்கும் மட்டுமே உண்டு.
உலகின் முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை காதலின் விசை நிகழ்த்தும் அதிர்வுகள் உயிர்போடு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். காதல் என்றுமே அழிவதில்லை. அதை குறிப்புணர்த்தும் விதமான இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
காதலின் நகரமான பாரீஸ் வீதிகள் கலையம்சம் கொண்டு மிளிர்கிறது. ஐபில் கோபுரம் சாட்சியாக காதலை காதலுக்காகவே ஆன தினத்தில் கொண்டாடி வருகின்றனர். காதலர்கள் தங்களுக்குள் கிரீட்டிங் அட்டைகள், சாக்லெட்டுகள், பரிசுகளை பரிமாறி வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இவை எதுவும் இல்லாமல் உலகின் ஏதோ ஒரு மூலையில் அடுத்த வேலை உணவுக்கே வழியில்லாத மனிதர்கள் வாழும் பஞ்சப் பிரதேசம் ஒன்றில் இளம் காதலி தனது மனங்கவர்ந்த காதலனின் கையைப்பற்றி முத்தமிடுகிறாள்.
- நட்பு தினம் பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது
- சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது.
உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக காதலர் தினம் மருவி நிற்கிறது. அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் எவ்வாறு காதலர் தினம் வித்தியாசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
பின்லாந்து:
இங்கு வழக்கமான காதலர் தின மரபுகளுக்குப் பதிலாக, " நட்பு தினம் " பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களை வாழ்த்தியும் பரிசளித்தும் இந்த தினத்தைப் பின்லாந்து மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஜப்பான்:
ஜப்பானில், காதலர் தினத்தன்று பெண்கள் தங்கள் துணைக்கு சாக்லேட்டுகள், பரிசுகள் வழங்கி மகிழ்வார்கள். இந்த பாரம்பரியம் அதோடு முடிவடையவில்லை. சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, மார்ச் 14 அன்று, ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது. அப்போது பரிசுகளைப் பெற்ற ஆண்கள் தங்கள் காதலிக்குப் பரிசுகளை வழங்குவார்கள்.
டென்மார்க் மற்றும் நார்வே:
டென்மார்க் மற்றும் நார்வேயில், காதலர் தினம் என்பது ஜோடிகளுக்கு மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் தங்களுக்குள் கவிதை அட்டைகளைப் பரிமாறிக்கொள்வார்கள். கவிதை அட்டைகளை நேசிப்பவர்களுக்கு தங்களின் பெயரை எழுதாமல் அனுப்புவார்கள். யார் அனுப்பியது என்று அவர் கண்டுபிடித்தால் அவர் ஈஸ்டர் முட்டையை வெல்வார். இல்லையெனில் ஈஸ்டர் முட்டையை அவர் அனுப்பியவருக்குத் தர வேண்டும்.
இங்கிலாந்து:
இங்கிலாந்தில், காதலர் தினம் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகள் மிட்டாய், பழம் அல்லது பணத்திற்கு ஈடாக பாட்டு பாடும் ஒரு அழகான பாரம்பரியம் உள்ளது. சிலர் திராட்சை, பிளம்ஸ் அல்லது காரவே விதைகளால் சுடப்பட்ட காதலர் பன்கள் அல்லது "பிளம் ஷட்டில்ஸ்" பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஜெர்மனி:
காதல் மற்றும் காமம் இரண்டையும் குறிக்கும் வகையில், பன்றி சிலைகளையும், பொம்மைகளையும் கொடுத்து ஜெர்மானியர்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்
பிலிப்பைன்ஸ்:
காதலர் தினத்தில் அதிக திருமணங்கள் நடக்கும் இடம் பிலிப்பைன்ஸ். நூற்றுக்கணக்கான தம்பதிகள் வாழ்வில் ஒன்றிணைகிறார்கள். இதற்காக அரசாங்கம் பெரிய அளவிலான விழாக்களை நடத்துகிறது.
தென்னாப்பிரிக்கா:
ரோமானிய பண்டிகையான லூபர்காலியாவை கௌரவிக்கும் விதமாக பிப்ரவரி 15 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் அதுவரை தாங்கள் ரகசியமாக வைத்திருந்த காதலை வெளிப்படுத்துவார்கள்.
தான் காதலிக்கும் ஆடவனின் பெயரைத் துணிச்சலுடன் தங்கள் சட்டைகளில் இடம்பெறச் செய்து காதலனுக்கும், உறவினருக்கும் ஊராருக்கும் தனது காதலை அறியச் செய்வார்கள். பூக்கள் அல்லது சிறிய பரிசுகள் மூலமும் காதலர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவர்.
தைவான்:
தைவானில், காதலை வெளிப்படுத்துவதில் பூக்கள் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆண்கள் காதலர் தினத்திலும், மீண்டும் ஜூலை 7 ஆம் தேதியும் காதலிக்கு பெரிய பூங்கொத்துகளை வழங்குகிறார்கள். சரியாக 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை நீங்கள் பெற்றால், அது யாரோ ஒருவர் காதலை உங்களுக்கு சொல்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
தென் கொரியா:
தென் கொரியாவில், காதலர் தினம் என்பது ஒரு மாத கால கொண்டாட்டத்தின் தொடக்கமாகும். பிப்ரவரி 14 அன்று, தம்பதிகள் சாக்லேட்டுகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள். பின்னர், மார்ச் 14 அன்று, ஜப்பானின் பாரம்பரியத்தைப் போலவே, வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இறுதியாக, ஏப்ரல் 14 அன்று சிங்கிள்ஸ்களுக்கான கருப்பு தினத்துடன் கொண்டாட்டங்கள் முடிவடைகிறது.
பிரேசில்:
பிரேசிலில், திருமணத்தின் ரட்சகனான துறவி புனித அந்தோணியார் விழாவிற்கு முந்தைய நாளான ஜூன் 12 அன்று காதலர் தினம், தியா டோஸ் நமோராடோஸ் (காதலர்கள் தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி மாத காதலர் தினம் கார்னிவலுடன் வருவதால் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அமெரிக்காவைப் போலவே, பிரேசிலியர்களும் காதலர் தினத்தன்று இரவு உணவிற்கு வெளியே செல்வது, பரிசுகளை பரிமாறிக்கொள்வது, தங்கள் துணையுடன் இரவில் டேட்டிங் செய்வது உள்ளிட்டவை மூலம் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள்.
- காதலரை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை பல நாடுகளில் பிரபலமாக உள்ளது.
- இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு 'ரென்ட் எ பாய்பிரண்ட்' என்ற தளம் மும்பையில் தொடங்கப்பட்டது.
உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று (பிப்ரவரி 14) கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 'வாடகைக்கு காதலன் வேண்டுமா? ஒரு நாளுக்கு ரூ 389 கொடுத்தால் போதும்' என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில் ஒரு QR கொடு ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவல்களை பெற அதை ஸ்கேன் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெட்டிசன்கள் பலர் இந்த போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து காவல்துறையினர் டேக் செய்தனர்.
காதலரை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது.
இந்தியாவிலும் 2018 ஆம் ஆண்டு 'ரென்ட் எ பாய்பிரண்ட்' என்ற தளம் மும்பையில் தொடங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், இதே போன்ற சேவைகள் பெங்களூரு மற்றும் பிற பெருநகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 2023 ஆம் ஆண்டு வெளியான பிரபல இந்தி வெப் சீரிஸானா லஸ்ட் ஸ்டோரீஸ் 2 இல் தம்மனா நடித்திருந்தார்.
- கடைசியாக தம்மனா மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தமன்னா. இவர் கடந்த சில வருடங்களாக இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 2023 ஆம் ஆண்டு வெளியான பிரபல இந்தி வெப் சீரிஸான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 இல் தமன்னா நடித்திருந்தார்.
இதில் உடன் நடித்த இந்தி நடிகர் விஜய் வர்மாவுடம் தமன்னா காதல் வயப்பட்டார். நியூ இயர் சமயத்தில் இருவரும் கோவாவில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அவர்களது உறவு வெளிச்சத்துக்கு வந்தது.

அதன்பின்னர் வெளிப்படையாக பல நிகழ்ச்சிகளில் சேர்ந்தே வளம் வந்தனர். இடையில், அவர்களின் திருமண திட்டங்கள் பற்றிய செய்திகளும் வெளிவந்தன. ஆனால் இருவரும் சில வாரங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இந்தி சினிமா இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமன்னாவும் விஜய்யும் சில வாரங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர் என்று சினிமா வட்டாரம் கூறியதாக தெரிவித்துள்ளது.
ஆனால் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருப்பார்கள். இருவரும் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதோடு, அடுத்த படங்களுக்காக கடினமாக உழைக்கிறார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை டெலிட் செய்ததாக கூறப்படுகிறது. கடைசியாக தம்மனா மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.