என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாப்புலர் பிரண்ட் அமைப்பு"
- கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள்.
- தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். கம்யூனிஸ்டுகளின் வன்முறை அரசியலையும் அவர்கள் ஏற்கவில்லை. இது எனக்கு நன்றாக தெரியும்.
கேரள மாநில மக்களை பாதுகாக்கவே மத்தியில் ஆளும் மோடி அரசு பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்தது. இது தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.
ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால் இதனை விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கோபியும் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். இல்லையேல் கம்யூனிஸ்டுகள் பலம் வாய்ந்ததாக கருதும் கண்ணூர் தொகுதியிலும் போட்டியிட நான் தயார் என்றார்.
திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள், அமைப்புடன் தொடர்புடைய துணை குழுக்களின் அலவலகங்கள் என 56 இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
- பல முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். அது தொடர்பான விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதையடுத்து கடந்த 29-ந்தேதி கேரளாவில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள், அமைப்புடன் தொடர்புடைய துணை குழுக்களின் அலவலகங்கள் என 56 இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பல முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். அது தொடர்பான விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினருக்கு கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பயிற்றுவித்த முகமது முபாரக் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்.
அவரிடம் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பிறகு முகமது முபாரக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கைதான முகமது முபாரக் வக்கீல் ஆவார். கேரள ஐகோர்ட்டில் அவர் வக்கீலாக உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்